Friday, May 29, 2009

காந்தி ஐயா / காந்தி மாஸ்டர்

திருகோணமலைக்கு வந்து 'காந்தி ஐயா' என்று கேட்டால் சிறுபிள்ளைகள் கூட ஆர்வத்துடன் அவர்பற்றிச் சொல்வார்கள். இத்தனைக்கும் அவர் அரசியல்,சினிமா சார்ந்தவரோ அல்லது பிரபல தொழிலதிபரோ இல்லை.

உயரம் குறைந்த,நரைத்த தாடியுடன் கூடிய கருணை பொ்ழியும் முகத்துக்குச் சொந்தக்காரர். அவர் ஒரு ஏழை. ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர். அவரது ஒரே சொத்து புத்தகங்கள்தான்.

சமய,கலாச்சார,இலக்கிய நூல்களால் நிறைந்து கிடக்கிறது அவர் வீடு. அவற்றினை சேவை நோக்கோடு விற்பனை செய்வதே அவரது வேலை. திருகோணமலையில், பலரது வாசிப்பு பழக்கத்தின் உந்து சக்தியாக இருப்பவர்.

திருகோணமலையில் நடைபெறும் எந்த்வொரு விழாவிலும் அவரது புத்தகக் கடையினை நீங்கள் காணலாம். படிக்கும் காலத்தில் நிறைய சிறு புத்தகங்களை அவரிடம் இருந்துதான் நான் வாங்கி வாசித்தேன்.


92 வது வயதினைத்தொடும் காந்தி ஐயாவின் சொந்தப்பெயர் பொன்னம்பலம் கந்தையா. 1918 இல் யாழ்.மாதகலில் பிறந்த இவரது பெரும் பாலான வாழ்க்கைக்காலம் திருகோணமலை மக்களது முன்னேற்றத்துக்குப் பயன்பட்டது.

இவர் தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் கடமையாற்றிய காலத்தில் தனது ஒருவருட சம்பளத்தை அதன் அபிவிருத்திக்காக வழங்கியிருந்தார். ஆர்வத்துடன் வரும் இளைஞர்களுக்கு இலவசமாக பத்தகங்களை வழங்குதல் , நாடி வருபவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தல், கதிர்காம யாத்திரை முதலான சமய நிகழ்வுகளைக் கொண்டு நடத்துதல் என்று நீண்டு செல்கிறது இவர் பணி.


1945 முதல் காந்திய வழி நிற்கும் இவர் இடுப்பில் ஒரு துண்டு வேட்டியும், மார்பில் ஒரு சால்வையும் அணியும் வழக்கத்தைக் கொண்டவர். இதனால் எல்லோரும் காந்தி ஐயா என்றே அன்பொடு அழைப்பர்.

அவரிடம் யார் சென்றாலும் 'ஆனந்தம், ஆனந்தம்' என்று சொல்லி வரவேற்பார். இவ் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆனந்தமாகவே , உள்ளத்தில் காந்தீய உணர்வோடு இன்றும் இளமையாக காட்சி தருகிறார்.

த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

26 comments:

  1. அவரை நேரில் கண்டதில்லை என்றாலும் மனதில் மரியாதைக்குரிய மிக உயரமான இடத்தைப் பிடிக்கிறார்.. அய்யாவுக்கு வணக்கம்.. ஒரு வருட சம்பளத்தைப் பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுப்பது சாதாரண விஷயமில்லை.. பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. Martin G JayakanthMay 29, 2009, 4:19:00 PM

    "Every Tamils should respect him!!!!!!!!!! one of the greatest person in trincomalee"

    ReplyDelete
  3. நன்றி Gowripriya அவர்களே

    ReplyDelete
  4. நன்றி ஜுர்கேன் க்ருகேர்.....

    ReplyDelete
  5. எளிய உடை, கருணை ததும்பும்கண்கள், பார்க்கப் பரவசமாக இருக்கிறது நம்மிடையே வாழும் மனிதருள் மாணிக்கத்தை!. என்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் தவிர்க்கமுடியவில்லை. 'ஆனந்தம் என்று சொல்லி வரவேற்பதே அவரின் குணஇயல்பை எடுத்துக் காட்டுகின்றது. நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறேன். படத்திலாவது பார்க்கச் செய்த அப்பாவின் அழகிய படங்களிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. Srithayalan SritharanthayalanMay 30, 2009, 5:15:00 AM

    ungal savi angluku thavi

    ReplyDelete
  7. காந்தி ஐயாவை தெரியாத திருமலை சிறுவர்கள் ( இந்நாள் வாலிபர்கள்) எவரும் இருக்க முடியாது.

    மண்வாசனையுடன் கூடிய உங்கள் பதிவுகள் மீண்டும் திருகோணமலையில் உலவுவது போல் உள்ளது.

    தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ம்ம்ம்.... இவரும் திருகோணமலையின் அடையாளம் தான் ... இவரது தொண்டு 3ஆம் தலைமுறையினருக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .... எப்பொழுதும் உங்கள் வாயால் நல்லதை உச்சரித்து பாருங்கள் நல்லதே நடக்கும் ... அதன் அடிப்படையில் தான் இவரின் வாயில் இருந்து வரும் "ஆனந்தம் ஆனந்தம் " என்ற சொல்லும் அடங்குகிறது..
    இந்த வயதில்லும் இவரது அயராதா பணியை பாராட்டதான் வேண்டும் ...

    ReplyDelete
  9. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  10. காந்தி ஐயாவை தெரியாத திருமலை சிறுவர்கள் ( இந்நாள் வாலிபர்கள்) எவரும் இருக்க முடியாது.


    உண்மைதான் நன்றி Kones

    ReplyDelete
  11. நல்லதை உச்சரித்து பாருங்கள் நல்லதே நடக்கும் ...


    நன்றி Vilvarasa Prashanthan

    ReplyDelete
  12. Mathikrishna JayachandraMay 30, 2009, 6:03:00 PM

    அண்ணா! உங்கள் படைப்புக்கள் மிகவும் அருமை, உங்களை போல் மனிதர்கள் இருப்பதால்தான் திருகோணமலை வரலாறு இன்றுவரை அழியா கல்வெட்டாக உள்ளது. காந்தி ஐயா போன்ற பல வெள்ளை உள்ளங்களையும்,திருகோணமலையின் பழம்பெரும் வரலாறுகளையும் புது சந்ததிக்கு இனிவரும் காலங்களிலும் அளித்து உங்கள் சேவை தொடர நாமும் துணை நிற்போம் என்று வாழ்துக்கூறி நன்றியுடன் விடை பெறுகின்றேன்.

    ReplyDelete
  13. 1995ம் ஆண்டு இடப்பெயர்வின் போது பரித்தித்துறையில் இவரைப்போலவே ஒருவரைச்சந்திக்க நேர்ந்தது அவர் பெயர் பெயர் குலசிங்கம்.புத்தகங்களின்மேல் உள்ள ஆசையாலும் வாசிப்புப்பழக்கத்திற்காகவுமே ஒரு புத்தகக்கடைவைத்திருந்தார்.இனிமையான பதிவு

    ReplyDelete
  14. படைப்புக்கள் மிகவும் அருமை

    ReplyDelete
  15. இனிவரும் காலங்களிலும் அளித்து உங்கள் சேவை தொடர நாமும் துணை நிற்போம்

    நன்றி Mathikrishna Jayachandra

    ReplyDelete
  16. திரு.குலசிங்கம் பற்றி அறியத்தந்ததிற்கு நன்றி cherankrish

    ReplyDelete
  17. நன்றி கவிக்கிழவன் அவர்களே

    ReplyDelete
  18. Well done geevaraj. I know u and family very well. I was ur neighbour at cathedral street till 2002.
    Nice to meet u via this web site.

    Keep it up. Good luck

    ReplyDelete
  19. ///Nice to meet u via this web site.///

    same 2 u

    thanks a lot Dushi

    ReplyDelete
  20. Thanks for the link from the facebook. I am happy to say he is my relative, my mothers uncle (maamaa - my ammamma's brother)my grand father,but we all call him Ghandi maamaa.

    you are doing a nice job about Trincomalee and historyplease bring more details for us in the future thanks again.

    ReplyDelete
  21. thanks a lot Mr.senthuran Vijayanathan

    ReplyDelete
  22. Ganthi Ayyavai ninaivootiyamaikku nandri.

    ReplyDelete
  23. காந்தி ஐயா பற்றி நிறையக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சந்திக்கவில்லை என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் பதிவில் அவரது போட்டோ பார்த்ததும் அவரை 1990 களில் சந்தித்ததும், பல நூல்கள் வாங்கியதும் நினைவில் வந்தது. அத்தகைய பெரியாரை அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete