தனித்திருந்த வாழ்க்கையது
கசத்திருந்த நாளொன்றில்
கண்ணெதிரே கண்டேன்
அந்தக் கள்ளியை - என்
நெஞ்சத்தைத் கொள்ளைகொண்ட
அன்புச் செல்வியை
தனியாகச் சிரித்ததில்லை
தலையணை மறந்ததில்லை
என்னவோ ஆச்சு எனக்கு
எங்கேயோ போச்சு மனது - ஆகா
நண்பர்கள் பட்ட துன்பம்
நான்படலானேனே இப்போது
உடுப்பது எடுக்கச் சென்றால்
உணவது அருந்தச் சென்றால்
தனியாகச் சிரித்துக்கொண்டேன்
கேட்டால் வெடுக்கென்று
முறைத்துக் கொண்டேன் -ஐயோ
இப்படி மாறிப்போனேனே
வாழ்க்கையின் வசந்தமிது
வந்தது எனக்குமிப்போ
கவிதைகளால் எல்லாம்
சொல்லத் தெரியலையே! - என்
கனவெல்லாம்
கீறிக் காட்டிட முடியலையே!
த.ஜீவராஜ்
All the best !
ReplyDeleteநல்ல சகோதரனாய்,
ReplyDeleteநல்ல நண்பனாய்
Wish you all the best
thanks ஜுர்கேன் க்ருகேர்.....
ReplyDeleteநன்றி கவிக்கிழவன் அவர்களே
ReplyDelete"வாழ்க்கையின் வசந்தமிது வந்தது எனக்குமிப்போ
ReplyDeleteகவிதைகளால் எல்லாம் சொல்லத் தெரியலையே! "
சொல்லத் தெரியா விட்டாலும் இயற்கையாக இருக்கிறது உங்கள் காதல் கவிதை. வந்து விட்ட வாழ்க்கையின் வசந்தத்தை நிறைவுடன் அனுபவிக்க வாழ்த்துகிறேன்.
நன்றி வா(வ)ரம் - புது இணைய இதழ்
ReplyDeleteநன்றி Renuka Srinivasan
ReplyDeleteநன்றாகவுள்ளது
ReplyDeleteநன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
ReplyDelete