அலுவலகம், அயலவர் வீடு, படிக்குமிடம், பலபேர் கூடுமிடம் ஏன் பயணிக்கும் போதுகூட பக்கத்தில் இருப்பவரின் மதிப்பீட்டுப் பயம் நம்மை இயல்பாய் எதையும் செய்யவிடுவதில்லை.
இராசாக்களுக்கும், முகத்தில் கரிபூசி சிறுமைப்படுத்தப்பட்ட மனிதர்களுக்கும் இடையில் சாதாரண மனிதர்களாக வாழ தினமும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
நிர்ப்பந்தச் சி்ரிப்புக்கள் , வேண்டுமென்றேயான விசாரிப்புக்கள் போலி நாகரீகம், சுயம் மறைக்கும் சுதாகரிப்புக்கள் என்று நம்நேரமெல்லாம் வீணாகிப் போய்விடுகிறது அடுத்தவர் என்ன நினைத்திடுவாரோ என்ற பயத்தில்.
இதன்போது பெரும்பாலும் நம்மை இராசாக்களாக உருவகித்துக்கொண்டு அடுத்தவர் முகத்தில் கரிபூசி விடுகிறோம். அல்லது நம்முகத்தில் ஏலவே கரி இருப்பதாக கருதிக்கொண்டு அடுத்தவர் முன் மண்டியிட்டுவிடுகிறோம்.
பேச்சு, சிரிப்பு நடத்தையென்று எதிலும் நம்சுயம் தெரியவிடாது நமக்கு நாமே போட்டுகொள்ளும் வேசம் பலவேளைகளில் நமக்கே வெறுப்பாய் , அருவருப்பாய் இருந்துவிடுகிறது.
சாதாரண அன்றாட அலுவல்களில் அடுத்தவர் நினைப்புக்களின் ஆக்கிரமிப்புத்தாண்டி நம்மை நம்மியல்போடு அடுத்தவர் முன் வைப்பதும், அதேபோல் பிறரை அவர்களது இயல்போடு ஏற்றுக்கொள்வதும் நிறைவான வாழ்வின் தேவையாக இருக்கிறது.
இராசாக்களுக்கும், முகத்தில் கரிபூசி சிறுமைப்படுத்தப்பட்ட மனிதர்களுக்கும் இடையில் சாதாரண மனிதர்களாக வாழ தினமும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
(யாழ்.மருத்துவபீட காலத்துப்படங்கள்)
த.ஜீவராஜ்
:)
ReplyDeleteஅமாம் இதையேதான் நானும் ஒருக் கட்டுரையில் கேட்டிருந்தேன் அடுத்தவர் பார்வைக்கு நம் செயல்களை தின்னக் கொடுப்பது என்ன நாகரீகம் என்று.
ReplyDeleteநிஜம் தான்... நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ஜுர்கேன் க்ருகேர்.....
ReplyDeleteஉண்மைதான், நன்றி ஆ.முத்துராமலிங்கம்
ReplyDeleteநன்றி Gowripriya அவர்களே
ReplyDeleteஎங்கும் போராடித்தான் இயல்பை நிலை நிறுத்த முடிகிறது.
ReplyDeleteஉண்மைதான் சாந்தி அவர்களே
ReplyDelete"அடுத்தவர் நினைப்புக்களின் ஆக்கிரமிப்புத் தாண்டி நம்மை நம்மியல்போடு அடுத்தவர் முன் வைப்பதும், அதேபோல் பிறரை அவர்களது இயல்போடு ஏற்றுக்கொள்வதும் நிறைவான வாழ்வின் தேவையாக இருக்கிறது. ஆனாலும் சிலவேளை சுயம் பூசலும் தேவை தான் (தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள) திருவள்ளுவரின் "பொய்மையும்..." குறள் தான் ஞாபகம் வருகின்றது."
ReplyDeleteநன்றி Renuka Srinivasan
ReplyDelete