வானத்து வெள்ளை மேகங்களே வரப்போடு கோபமென்பதால் வரவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். கருகிப்போன வயல் அதை அறிந்தால் மீண்டுவந்து காறி உமிழும் உங்கள் முகத்தில். வயல் செழிப்பாய் இருந்த நாளில் மழைதரப்போவதாய் அடம்பிடித்த மேகங்கள் எல்லாம் போசுங்கிப்போகையில் மேலிருந்து படம்பிடித்த விந்தை சரித்திரத்தின் கரிய பக்கங்களாய் பதிந்து போயிருக்கிறது.
வயலின் அழிவு உலகிற்கு ஒன்றும் புதிதில்லைதான். இருந்தும் அதைத்தடுக்கத்தானே மேகங்களின் கூட்டமைப்பு உருவானது. கருகும் வரை பார்த்திருந்து அழிவின் முடிவில் வந்து தப்பியதைக் கணக்கெடுப்பதில் என்னபயன்.
வயலின் அழிவு உலகிற்கு ஒன்றும் புதிதில்லைதான். இருந்தும் அதைத்தடுக்கத்தானே மேகங்களின் கூட்டமைப்பு உருவானது. கருகும் வரை பார்த்திருந்து அழிவின் முடிவில் வந்து தப்பியதைக் கணக்கெடுப்பதில் என்னபயன்.
புலம்புவது தவிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலையிலும், அதிகம் புலம்பினால் பிடுங்கி எறியப்படலாம் எனும் பயத்திலு்ம இருக்கும் நாற்று.
த.ஜீவராஜ்
good one....
ReplyDeletethanks Nagulendran Selvendran
ReplyDelete//கருகும் வரை பார்த்திருந்து அழிவின் முடிவில் வந்து தப்பியதைக் கணக்கெடுப்பதில் என்னபயன்//
ReplyDeleteஅருமை..
//”இப்படிக்கு நாற்று”//
இப்படியாக முடிவதும்..
//இப்படிக்கு....
புலம்புவது தவிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலையிலும், அதிகம் புலம்பினால் பிடுங்கி எறியப்படலாம் எனும் பயத்திலு்ம இருக்கும் நாற்று//
வெகு அருமை. பாராட்டுக்கள்!
நன்றி ராமலக்ஷ்மி அவர்களே
ReplyDeletemmm,, very good
ReplyDeleteths Sentholan Tamilan
ReplyDelete“மேலிருந்து படம்பிடித்த விந்தை சரித்திரத்தின் கரிய பக்கங்களாய் பதிந்து போயிருக்கிறது.”
ReplyDeleteமேலிருந்து பிடித்த படமாவது இரும்புத் திரைகளுள் நடந்ததைக் கூறட்டுமே!
கருகும் வரை பார்த்திருந்து அழிவின் முடிவில் வந்து தப்பியதைக் கணக்கெடுப்பதில் என்னபயன்."
ஆம் உண்மை தான். கருகியது எவ்வளவு என்பதும் எப்படி என்பதும் தப்பிய கணக்கில் வரப் போவதில்லையே!
நாற்று, கவனம்.
நாற்று, கவனம்.
ReplyDeleteநன்றி Renuka Srinivasan