Tuesday, May 19, 2009

துயர்பகிர்வு

தம்பலகாமம்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் இன்று(19.05.09) தம்பலகாமம் குஞ்சடப்பன்திடலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் நான்கு மணியளவில் நல்லடக்கத்துக்காக முள்ளியடி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பேரன் த.ஜீவராஜ்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

26 comments:

  1. நலம் விசாரித்து
    நாடிய சுகம் போய்ச் சேருமுன்பே..
    நாவலர் மறைந்தது மாயம் என்ன....?

    நான் பிறந்த மண்ணில்
    அம்மா சொன்ன தகவல்கள்..
    ஆவலாய் அறிய முன்பு..
    ஆறுதல் தேடி ஆவி பிரிந்ததென்ன..?

    ஆவி பிரிந்திட்டாலும்..
    ஆற்றிய தொண்டு மறையாதய்யா..
    தேடிய செல்வங்களிலும் சிறப்பாய்..
    தமிழை வளர்த்தாய். தரணி எங்கும் உன் புகழ் மங்காதய்யா..

    உடலை மட்டும் பிரிகின்றோம்..
    உணர்வால் எழுதிய எழுத்துக்கள் உயிராய்..
    உள்ளத்தால் நாளும் நாமும் மதிக்கிறோம்..
    ஐயா உங்கள் பாதங்களுக்கு தொலைதூரத்திலிருந்து
    கண்ணீர் மலர்களால் தொழுது பிரார்திக்கின்றேன்.

    ReplyDelete
  2. எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.. வானொலியில் இதை சுருக்கமாக சேர்த்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. தம்பலகாமம் என்னும் மண்ணை விரும்பிய ஒரு மனிதனின் இறப்பு
    மிகவும் துயர் தருவதாக இருக்கின்றது,வீரகேசரியில் இனி ஒரு போதும் அவரை காணமுடியாது
    உறவினர்களுக்கு ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துகொள்கின்றோம்.

    ReplyDelete
  4. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  5. நன்றி thanimathy அவர்களே

    ReplyDelete
  6. நிறைவான ஒரு பெருவாழ்வு வாழ்ந்து, நிறைந்த தங்கள் பாட்டனாரின் ஆத்மா கட்டாயம் சாந்தியடையும்.
    அவரைச் சிறப்புடன் அனுப்பிவைக்கவும்.
    நாம் மறக்க முடியாத நாளொன்றிலல்லோ அவர் நிறைந்துள்ளார்.
    அன்னார் உற்றார், உறவுகளுடன் துயர் பகிர்கிறேன்.
    அன்புடன்
    யோகன்

    ReplyDelete
  7. Our Deepest Sympathies!!!
    EP lost a great writer!!!
    http://worldtamilrefugeesforum.blogspot.com

    ReplyDelete
  8. நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  9. thanks MR.Shan Nalliah / GANDHIYIST

    ReplyDelete
  10. தமிழிற்கும் சைவத்திற்கும் பெருந் தொண்டாற்றிய அன்னாரது இழப்பு தமிழ் உலகிற்கே மாபெரும் இழப்பு. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அழிவினைத் தாங்க முடியாமல் தன்னுயிரையும் ஈர்த்தார் என்றே கூற வேண்டும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

    ReplyDelete
  11. Kavitha RanganathanMay 20, 2009, 5:26:00 AM

    ஐயாவின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்...

    ReplyDelete
  12. Suntharalingam SivasankaranMay 20, 2009, 5:30:00 AM

    Very sad news in the sad situation Jeevaraj. in a word, loss of history....! When a birth confirmed deth also confirmed! condolance to U and our families!

    ReplyDelete
  13. Sooriya SooriyaprasanthMay 20, 2009, 5:32:00 AM

    My deepest sympathies during your time of loss. May the peace which comes from the memories of love shared, comfort you now and in the days ahead.

    ReplyDelete
  14. தம்பலகாமம் மக்களுக்கு இது ஒரு பேரிழப்பாகும்... ஐயாவின் ஆத்ம சாந்திக்கா பிரார்திக்கின்றோம்...

    ReplyDelete
  15. ஜீவராஜின் அப்பப்பா க.வேலாயுதம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  16. ரதி மகேஸ்வரன்.May 20, 2009, 5:35:00 AM

    ஜீவராஜின் அப்பப்பா க.வேலாயுதம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  17. நன்றிகள்
    Renuka Srinivasan
    Kavitha Ranganathan
    Suntharalingam Sivasankaran
    Sooriya Sooriyaprasanth
    Pratheepan Kuna

    ReplyDelete
  18. நன்றி Suganthe, ரதி மகேஸ்வரன் அவர்களே

    ReplyDelete
  19. Saththikumar GnanaMay 20, 2009, 5:42:00 AM

    Our deepest heart felt condolences for the great lost of your grandpa

    ReplyDelete
  20. திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவரும், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் அதிகாலை.காம் இணையதளத்தில் இலக்கியத் தொடராய் வாராவாரம் பிரசுரமாகும் "ரங்கநாயகியின் காதலன்" இலக்கிய நாவலின் ஆசிரியருமான தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.


    http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14504&lang=ta&Itemid=164

    ReplyDelete
  21. நன்றி அதிகாலை.காம்

    ReplyDelete
  22. இழப்பினைக் குறித்த எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே !

    ReplyDelete
  23. நன்றி எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete