பாடல் ஒன்று எழுதச் சொல்லி
காற்றுக் கேட்குது ஆனால்
பாழும் மனது வார்த்தை வரும்
வழியைப் பூட்டுது
வயல் வெளியில் தென்றலோடு
சேர்ந்து நடக்கையில் தடை
வரம்பு மீறிப் பாய்ந்துவருது
கவிதை அருவியே
அடிக்கும் தொலைபேசிதனை
எடுக்கப் போகையில் மனதில்
இடிஇடித்து கொள்கிறதே
எதிர் முனையில் யார்?
தெருவில் நின்ற மனிதனவன்
உற்றுப் பார்த்ததால் அந்த
இரவு முழுதும் பகலாய்ப்போச்சே
என்ன கொடுமை சார்
செய்தி சொல்லும் TV தனை
உரத்துக் கேட்கையில் சில
சொற்கள் வந்தால் பதறியடித்து
குறைக்க வேண்டும் நாம்
மனம் விட்டு சிரிச்சுப்
பல வருசமாகுது சொந்த
சனம் மறந்து போனவர்கள்
தொகையும் கூடுது
இறப்பின் பயம் தெரியுதிங்கே
எல்லோர் முகத்திலும் இன்னும்
எத்தனைகாலம் இப்படி நாமும்
வாழப் போகிறோம்
த.ஜீவராஜ்
வாழும் போது செத்துச் செத்துச் பிழைப்பவன் மனிதனா ! என்ற வைரமுத்துவின வரிகள் தான் ஞாபகம் வருகின்றது !
ReplyDeleteஉங்கள் படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன !
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !
நன்றி ஓவியன்
ReplyDelete“இறப்பின் பயம் தெரியுதிங்கே
ReplyDeleteஎல்லோர் முகத்திலும் இன்னும்
எத்தனைகாலம் இப்படி நாமும்
வாழப் போகிறோம்”
இன்றைய காலத்தில் எம்மவர் நிலைமை இதுவாகி விட்டது. இன்றோ?
நாளையோ ?என்றோ ? விடிவு வரும் என்று நம்பியிருக்கும் அந்த மக்களைப் போல விரைவில் ஓர் புதிய உதயம் வரும் என்று நம்புவதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?
//அடிக்கும் தொலைபேசிதனை
ReplyDeleteஎடுக்கப் போகையில் மனதில்
இடிஇடித்து கொள்கிறதே
எதிர் முனையில் யார்?
தெருவில் நின்ற மனிதனவன்
உற்றுப் பார்த்ததால் அந்த
இரவு முழுதும் பகலாய்ப்போச்சே
என்ன கொடுமை சார்
செய்தி சொல்லும் TV தனை
உரத்துக் கேட்கையில் சில
சொற்கள் வந்தால் பதறியடித்து
குறைக்க வேண்டும் நாம்//
உங்கள் உள்ளம் படும் பாடு இந்தவரிகளில் தெரிகிறது.
நன்றி Renuka Srinivasan
ReplyDeleteநன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே
ReplyDelete//மனம் விட்டு சிரிச்சுப்
ReplyDeleteபல வருசமாகுது சொந்த
சனம் மறந்து போனவர்கள்
தொகையும் கூடுது//
எல்லாருக்கும் பொதுவான துயர். சொந்தங்களைப் பிரிந்து சொந்த ஊர்களைப்பிரிந்து ஆண்டுகளைக் காலம் கொண்டு போன பின்னும் அவலம் தொடர்கிறது.
சாந்தி
நன்றி சாந்தி அவர்களே
ReplyDeleteமனம் கனக்கிறது .... நெஞ்சு வெடிக்கிறது .....
ReplyDeleteஉங்கள் உணர்விர்க்கு நன்றி நண்பரே
ReplyDeleteம்ம்ம்ம்...வலிக்கிறது.
ReplyDeleteநன்றி அன்புடன் அருணா அவர்களே
ReplyDelete