மீள ஒட்டமுடியாதபடி
உடைந்து போகிறது
கண்ணாடி ஒன்று
உலகத்தின் முன்னே
நிலையில்லாதபடி நாளும்
நெளிந்து போகிறது
மனித நேயம்
இன்னல் வருகையில்
எவரெப்படி இருப்பார் என்று
தெரிகிறது திரையில் பின்னர்
அதுவும் கிழிந்து போகிறது
எலிபுகுந்து விட்டது இனி
வால் மட்டும்தானென்று
நாளும் நடக்கிறது கொடிய யுத்தம்
காணும் காட்சிகளால் மனது கனக்கிறது
பிணக் குவியல் மேல்நின்று
யார்செய்வது பிழையென்று
ஆராய்ந்து ஓய்கிறது உலகம்
கூடும் உயரத்தின் ரணம் புரியாது
உலகக் கனவான்களின்
உள்ளங்களில் எல்லாம் கவலைரேகை
இறந்த,இழந்தவர்கள் பற்றியல்ல தம்மரசியல்
இருப்புக்களின் எதிர்காலம் குறித்து
நெஞ்சிலடித்து ஓவென்றழும்
உயிர்ப்பலி கொடுத்தவன் தவிர்த்து
யாருக்குப் புரியப்போகிறது மீளத்திருப்பிக்
கிடைக்காத இழப்புக்களின் வலி????
த.ஜீவராஜ்
மிக அருமையான எழுத்துகள் நண்பா தொடர்ந்து எழுதுங்கள் இனி நான் உங்க பாலோவர்
ReplyDeleteபிணக் குவியல் மேல்நின்று
ReplyDeleteயார்செய்வது பிழையென்று
ஆராய்ந்து ஓய்கிறது உலகம்////
எங்களாலும் இதைத்தவிர வேறென்றும் செய்ய இயலா கையறு நிலையில் இருக்கிறோம். தமிழன் கூட்டம் கூட்டமாய் கொன்று குவிக்கப்படுவதை எண்ணி கண்ணீர் துளிகளை சிந்தமுடியுமே தவிர... யுத்த களத்தில் ரத்தம் சிந்த முடியாது///,
மிக அருமையான எழுத்துகள் நண்பா தொடர்ந்து எழுதுங்கள் இனி நான் உங்க பாலோவர்
ReplyDeleteSuresh
மிக்க நன்றி நண்பரே
ஜீவநதி வலைப்பூவினை இவ்வார நட்சத்திரமாக நெல்லைத்தமிழ்.COM சிறப்பிப்பதையிட்டு எனது மனம்நிறைந்த நன்றிகளை நெல்லைத்தமிழ்.COM நிர்வாக குழுவினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete/மீள ஒட்டமுடியாதபடி
உடைந்து போகிறது
கண்ணாடி ஒன்று
உலகத்தின் முன்னே
தட்டிச் சரிசெய்திடும்
நிலையில்லாதபடி நாளும்
நெளிந்து போகிறது
மனித நேயம்
/
உண்மை தான் நண்பரே
“நெஞ்சிலடித்து ஓவென்றழும்
ReplyDeleteஉயிர்ப்பலி கொடுத்தவன் தவிர்த்து
யாருக்குப் புரியப்போகிறது மீளத்திருப்பிக்
கிடைக்காத இழப்புக்களின் வலி????”
வரிகள் உண்மை நிலையை எடுத்துச் சொல்கின்றன. நானும் இதையே தான் அடிக்கடி நினைப்பேன், எமக்கென்று வரும் வரை அதன் இழப்பு புரியாததே.