திருக்கோணேச்சரம்
இங்கு காண இருப்பது அழிவில் இருந்து மீண்டெழுந்த ஆலய வரலாற்றின் சுருக்கம்.
திருக்கோணேச்சரம் கி.பி 1624 இல் போத்துக்கீச தளபதி கொன்ஸ்ரன்டைன் டிசா என்பவனால் கொள்ளையடித்து,இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வு பற்றி முன்னமே அறிந்துகொண்ட அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும், மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்தனர்.
தமது உயிரைப் பணயம் வைத்து மூல விக்கிரகமான கோணேஸ்வரரை இரகசியமாக காடுகள் வழியே எடுத்து வந்து தம்பலகாமம் மேற்கு மலைத்தொடரில் உள்ள கழனி மலைச்சிகரத்தில் வைத்து பூசித்து வந்தனர்.இதனால் இம்மலை சுவாமி மலை என்று அழைக்கப்படுகிறது.
பின்னர் கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து தம்பலகாமம் கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.
சுவாமி மலை
பின்னர் கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து தம்பலகாமம் கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.
அதேவேளை திருக்கோணேச்சரமும் சைவப்பெருமக்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் நிர்மானிக்கப்பட்டு சிறப்பாக வழிபாடியற்றப்பட்டு வருகிறது. ஆச்சரியம் தருவதாய் இருக்கிறது போத்துக்கீசர் முற்றாக அழிக்க நினைத்த ஆலயம் அழிவில் இருந்து மீண்டெழுந்து இரு ஆலயங்களாக பரிணாமித்திருக்கும் வரலாறு.
த.ஜீவராஜ்
thanks
ReplyDeleteநன்றி soundiramouty அவர்களே
ReplyDeleteஉங்கள் ஊரில் எனக்கு பிடித்த இடம் இந்த கோயில். முதலதடவை வரும்போது என்மனதை கவர்ந்த இடம். வுயல்கள் மத்தியில் கோவில். அந்த இடத்தில் இருந்தால் கவிதை தானாக வரும். நன்றி என் தம்பலகாம நண்பர்களும் இக்கதையை எனக்கு கூறியுள்ளனர். மீண்டும் வாசிக்கும் போது இளஞர்கள் பளம்கதைகளை வரும்சந்ததியினருக்கு எவ்வாறு காவிச்செல்கின்றனர் என்பது விளங்குகிறது
ReplyDeletewell done go ahead
ReplyDeleteths Anonymous
ReplyDeleteஅழிக்க நினைத்து அடாது செய்தாலும்
ReplyDeleteமனத்திடம் இருந்தால்
அழிவில் இருந்து மீண்டெழுந்து வரலாம்
என்பது நம்பிக்கையளிக்கும் செய்தி அல்லவா?
உண்மை...
ReplyDeleteநன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே