அந்தப்பக்கம் இத்தனை
இந்தப்பக்கம் இத்தனை
என்று எழுதும் வரலாறு
என்றேனும் அறியுமா?
இறந்தவனை இழந்தவன்
இறுதிவரை படும் துயரம்
கணநொடியில் மரித்திடாத
கையிழந்த, கால் இழந்த
மெய்யெல்லாம் புண்சுமந்த
விதியழைக்கும் வேளைவரை
வேதனையில் உழலுகின்ற என்
உறவு்களை யாரறிவார்
கையிழந்ததறியாது தானே
சோறுண்ண அடம்பிடிக்கும்
பிள்ளைதனைப் பார்க்கையிலே நெஞ்சு
பீறிட்டு வெடிக்கிறது
சொல்லவந்த வார்த்தைகள்
சிக்கித் தவிக்கிறது
எத்தனையோ எழுதமனம்
ஏங்கித் துடிக்கிறது
அத்தனையும் வீணே என்று
அலுத்து முடிக்கிறது
வரலாறு மட்டுமிங்கே
மரணங்களால் நிறைகிறது....
த.ஜீவராஜ்
அருமையான படைப்பு...
ReplyDeleteவாழ்த்துகள்...
நன்றி கவிக்கிழவன்
ReplyDeleteவேதனையை வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை. எனினும் அதனில் பொதிந்துள்ள கருத்து மனதை மிகவும் பாதிக்கிறது. இறந்தவர்களை விட இவ்வாறு இருப்பவர்களின் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வரலாறு மட்டுமல்ல நிகழ்காலம் கூட முழுதாக அறியாது என்பதே உண்மை.
ReplyDeleteஅருமையான படைப்பு சிறு திருத்தம் சொல் வார்த்தை இரண்டும் ஒன்று தான் .சொல் இழந்த வரிகள் என இருத்தல் நலம்.
ReplyDeleteநன்றி Renuka Srinivasan
ReplyDeleteநன்றி சுட்டிக்காட்டியமைக்கு baghyalakshmi அவர்களே
ReplyDeleteசொல்லவந்த வார்த்தைகள்
சிக்கித் தவிக்கிறது
என்று மாற்றி இருக்கிறேன்.
கையிழந்ததறியாது தானே
ReplyDeleteசோறுண்ண அடம்பிடிக்கும்
பிள்ளைதனைப் பார்க்கையிலே நெஞ்சு
பீறிட்டு வெடிக்கிறது
சொல்லவந்த வார்த்தைகள்
சிக்கித் தவிக்கிறது
valiyudan kudiya kavithai anna
நன்றி sakthi
ReplyDeleteகவிதை கனக்கிறது. வார்த்தைகளில் மனதினை ஆற்றிக் கொள்ள இயலாத வலி புரிகிறது.
ReplyDelete