Monday, April 27, 2009

துகிலுரிதலும்,பார்த்துக்கொண்டிருத்தலும்...


இன்றுவரை எனக்கு மர்மங்கள் பலநிறைந்த வாழ்வியல் ஆவணமாகத் தென்படுகிறது மகாபாரதம்.

சிலநாட்களாகவே மகாபாரதத்தில் திரௌபதிக்கு நிகழ்ந்த அந்த மிகக்கொடூரமான நிகழ்வான ‘துகிலுரிதல்’ சம்மந்தமான சில காட்சிகள் அவ்வப்போது மனதில் தோன்றி விடைதெரியாத பலகேள்விகளை எழுப்பிவிட்டுச் செல்கிறது.

Monday, April 20, 2009

காலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு

TRINCOMALEE WAR CEMETERY

TRINCOMALEE WAR CEMETERY

TRINCOMALEE WAR CEMETERY
TRINCOMALEE WAR CEMETERY

TRINCOMALEE WAR CEMETERYTRINCOMALEE WAR CEMETERY
TRINCOMALEE WAR CEMETERY

திருகோணமலை நகரத்திற்கு வெளியே, நிலாவெளிக்குப் போகும் பாதையில் மூன்று மைல் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மயானம் பிரிட்டிஸ் காலணித்துவத்தின் கடைசிச் சின்னங்களாக நமக்கு காட்சி தருகிறது. 228 பிரிட்டி்ஸ், 48 இந்தியர்,13 இலங்கையர் அடங்கலாக 362 பேரின் கல்லறைகளைக் கொண்டமைந்துள்ள இம்மயானத்தில் பெரும்பாலானவை போர்வீரர்களின் கல்லறைகளாகக் காணப்படுகின்றன. இலங்கையின் ஆளுமைக்கு இப்பிரதேசம் உட்பட்ட பின்னரும் இன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.

நான் போனபோது சூரியன் தன் அன்றைய நாளுக்கான பயணத்தை முடிக்கும்தருவாயில் இருந்தார். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஒருகாலத்தில் சூரியனே மறையாத தேசத்துக்காக போராடிய வீரர்களின் அந்தக் கல்லறைகளின் மேல் மெல்ல ,மெல்ல நிழல் விழ ஆரம்பித்திருந்தது. வாழ்க்கையின் விசித்திரம் இதுதான்.இப்போது அவர்கள் கல்லறைக்குள் என்றாலும், அவர்களது  சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.


காலனித்துவ காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாறு கணநேரத்தில் மனத்தில் நிழலாடி மறைந்தது. அன்றைய காலணித்துவ ஆட்சியில் எம்முறவுகள் அனுபவித்த துன்பங்களை எனக்குக் கிடைத்த வாசிப்புக்களும்,செவிவழிக்கதைகளும், ஒலி, ஒளிப்படக்காட்சிகளும் ஞாபகப்படுத்தின. இருந்தும் காலனித்துவத்துக்குப் பின்னான இனவன்முறையின் கோரதாண்டவத்திற்கு, பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை நானும்மோர் சாட்சியாக இருக்கின்றேன் என்ற உணர்வு வந்தபோது ஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.

கைத்தொலைபேசி நகருக்கு சொல்லும் வீதியில் ஏதோ பிரச்சனையாம் என்றலறியது. திடுக்கிட்டு என் ஞாபகச்சிதறல்களில் {??சுடலைஞானம்} இருந்து விடுபட்டு பதைபதைப்புடன் அடையாள அட்டை,மற்றும் ஆவணங்களை ஒருதரம் சரிபார்த்துக்கொண்டு வீதியில் இறங்கினேன். பாடசாலை.அலுவலகம்,அயலவர்வீடு என்று இன்னபிற காரணங்களுக்காகச் சென்ற தங்கள் குடும்ப அங்கத்தினரைத்தேடியோடும் மக்களால் வீதி நிறைந்திருந்தது.

வீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது. காலாகாலமாய், பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.

த.ஜீவராஜ்

Thursday, April 16, 2009

என் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு












{ படங்களில் காண்பது தம்பலகாமம் }
மீட்டப்படும் பழைய ஞாபகங்கள்...
வாழ்வு திரும்புமா?
த.ஜீவராஜ்
16/04/2009

Monday, April 13, 2009

யுத்தம்,இரத்தம்,சமாதானம்....


நட்பான பல வருசங்களே தப்பாகிப்போன என்னூரில் இரத்தங்களுக்கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் நடுவில் இருள்கிழிக்குமா ? என்ற கேள்விக்குறியோடு தமிழுக்கு விரோதி வருசம் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.இதில் தமிழுக்கு வருசம் தை யா? சித்திரை யா ? என்ற வாதப்பிரதிவாதங்கள் வேறு.

Thursday, April 09, 2009

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புகைப்படங்கள் 2009


அமைவிடம் :- திருகோணமலை நகரின் பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் எதிரே பரந்த விளையாட்டு மைதானமும், அதையடுத்து விரிந்து கிடக்கும் கடலும் இவ்வாலய சூழலின் இயற்கை அழகை மெருகூட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.