பெண்கோழி
நெஞ்சடைக்கக் கொக்கரித்து
நீங்கள் இடும் கூச்சலினால்
பஞ்சணைபோல் கூடுதனில்
படுத்துறங்கும் என் துயிலைக்
கொஞ்சமேனும் நோக்காது
குழப்புகிறீர் என் துரையே.
நீங்கள் இடும் கூச்சலினால்
பஞ்சணைபோல் கூடுதனில்
படுத்துறங்கும் என் துயிலைக்
கொஞ்சமேனும் நோக்காது
குழப்புகிறீர் என் துரையே.
சேவல்
அஞ்சுகமே! என்னுடைய
அழகான பெண் மயிலே!
மிஞ்சி ஒளி வீசி வரும்
வெய்யோன் வரவுதனை,
வஞ்சனை எதுவுமின்றி
மாந்தர்க் குணர்த்துகிறேன்.
அழகான பெண் மயிலே!
மிஞ்சி ஒளி வீசி வரும்
வெய்யோன் வரவுதனை,
வஞ்சனை எதுவுமின்றி
மாந்தர்க் குணர்த்துகிறேன்.
கடமை கடமை என்று
கத்துகிறீர் கண்ணாளா!
மடமையால் மானிடர்கள்
மறந்துநம் உதவிகளை,
கடையர் போல் நமைக்கொன்று
கறிசமைத்து உண்பவர்காண்.
கத்துகிறீர் கண்ணாளா!
மடமையால் மானிடர்கள்
மறந்துநம் உதவிகளை,
கடையர் போல் நமைக்கொன்று
கறிசமைத்து உண்பவர்காண்.
சேவல்
அவர் அவர் செய்வதற்கு
அதன் பலனைக் காண்பார்கள்.
கவனமாய் நம் கடமை
கழித்து விட்டால் கண்மணியே,
தவம்வேறு ஏன் நமக்குத்
தர்மம் தலை காக்கும்........
அதன் பலனைக் காண்பார்கள்.
கவனமாய் நம் கடமை
கழித்து விட்டால் கண்மணியே,
தவம்வேறு ஏன் நமக்குத்
தர்மம் தலை காக்கும்........
தம்பலகாமம்.க.வேலாயுதம்
பல்லவிபோல் அமைந்த மிக அருமையாக உள்ளது இக்கவிதை இதை எழுதியது எப்போதிருக்கும்
ReplyDeleteநன்றி ஆ.முத்துராமலிங்கம்
ReplyDeleteஇக்கவிதை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது.....