Wednesday, March 25, 2009

புலவரின் மனஅங்கலாய்ப்பு


உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொகையான மக்கள் தொழில் செய்து ஊதியம் பெற்று உயிர் வாழவும் உலகில் பல விதமான தொழில்கள் இருக்கின்றன் ஆயினும் சிலர் உலகில் உள்ள எல்லாவற்றிலும் கல்வியே சிறந்த தென்று ஆராய்ந்து அறிந்து கல்வியை கசடறத் துறைபோகக் கற்று பாண்டித்தியம் எய்தி ஆற்றல் மிக்க கவிவாணர்களாக அழகும் அறிவுமிக்க கவிதைகள் புனைந்து மனித குலத்தை நெறிப்படுத்தும் பெரும்தொண்டு புரிந்து வருகின்றனர். மானிட சமூதாயத்தின் சீலமான நல்வாழ்வுக்காக தங்கள் முழுக்காலத்தையும் செலவிட்டு வரும் படித்த மேதைகளான புலவர் பெருமக்கள் தங்கள் வாழ்வைக் கழிக்கும் நோக்கில் பொருள் தேடுவதென்பது இயலாத காரியம்.

அப்படி புலவர்கள் உழைக்கும் நிர்ப்பந்தம் நேர்ந்தால் சமூதாயத்தின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சிந்தித்து நல்ல பொருள் சேர்ந்த பாடல்களை எழுதவும் முடியாது. புலவர் பெருமக்களும் பொது சனங்களை மகிழ்விக்கும் நாடக நாட்டிய நடிகர்களைப் போன்ற கலைஞர்களேயாகும். புலவர் பெருமக்கள் மனித குலத்தின் மேம்பாட்டுக்காக ஆற்றிவரும் தொண்டுகளை நன்கறிந்த பழம் தமிழ் வேந்தர்கள் இந்த நன் மக்களை தம்மைப் போல் சரிசமமாக மதித்துப் போற்றியதுடன் அவர்களது சிறப்பு மிக்க கவிதைகளுக்கு பொற்காசுகளை வாரி, வாரி வழங்கி பொருளாதார
கஷ்டம் ஏற்படாமல் மகிழ்ச்சியாக வாழ வழிசெய்து வந்தனர். 

மன்னர் ஆட்சியின் மறைவுக்குப் பின் சமூதாயத்தில் கற்றறிவும், கருணையும் மிகுந்த பெரும் செல்வந்தர்கள் இப் புலவர் பெருமக்களை மன்னன் மதித்தது போல் கௌரவித்துச் சன்மானங்கள் வழங்கி போஷித்து வந்தனர். காலப்போக்கில் பொருள் குவிக்கும் பேராசையால் மனித சமூதாயத்தில் இருந்து வந்து வள்ளல் தன்மை என்னும் நல்ல பண்பு குறைந்து போனது. இதன் காரணமாக மன்னர்களாலும் வள்ளல்களாலும் பாராட்டி உற்சாகமூட்டி வளர்க்கப்பட்ட கற்றறிந்த புலவர்கள் பசி, பட்டினியால் வாடி நலிந்தனர்.

இந்த வகையில் கல்வியே சிறந்ததென்று எண்ணித் தங்கள் வாழ்வைக் கழிப்பதற்கென வேறு எந்தத் தொழிலையும் கற்காமல் கல்வியை கசடறக்கற்ற பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்னும் புலவர் பெருந்தகை ஆதரிப்பார் அற்று வறுமை அரக்கனின் கோரப் பற்களுள் சிக்கி மனம் வருந்தி பின்வருமாறு கூறுகின்றார்.

களைக்கூத்தாடுதல், செப்பிடு வித்தை செய்தல், மோகவித்தை செய்தல் போன்று உலகில் எத்தனையோ தொழில்கள் இருக்கும் போது அவைகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளி விட்டுக் கல்விதான் மேன்மை உடையது என்று எண்ணிய மூடமனமே! இந்த தமிழில் ஆசை வைத்துக் கற்றாயே. இந்த தமிழ்க் கவிதைச் சுவையில் உனக்கு யார் பொருள் தந்து ஆதரிக்கப் போகிறார்கள் நீயும் உன்னைப் போன்ற புலவர் கூட்டமும் பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. இனியேனும் தமிழ் மொழியை அமிர்தம் என்றெண்ணும் வரட்டுத் தனத்தைக் கைவிட்டு விபசாரம் செய்யும் மாதருக்கு தூது சென்றாவது உன் வறுமைப் பேயை ஓட்ட வழி பார் என்று தமிழ் மொழியை உயிராக மதித்துப் போற்றி கற்ற அப்பெரியார் ஆதரிப்பாரற்று வறுமை சூழ்ந்து வருவதால் அமிர்தம் எனச் சுவைத்துக் கற்ற தனது தாய் மொழியான தமிழைச் சனியன் என்று எண்ணும் அளவுக்கு விரக்தி தோன்றியுள்ளதை எண்ணும் போது வேதனை தருவதாக உள்ளது.
அடகெடுவாய் பல
தொழில்கள் இருக்கக் கல்வி
அதிகமென்று கற்று விட்டோ
மறிவில்லாமல்
திடமுன் மோகனமாடக்
கழைக்கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாடத்
தெரிந்தோமில்லை
தடமுலை வேசையராகப்
பிறந்தோமில்லை
சனியான தமிழை
விட்டுத்தையலார் தம்
இடமிருந்து தூது சென்று
பிழைத்தோமில்லை
என் ஜென்மம் எடுத்துலகில்
இருக்கின்றோமே
(படிக்காசுத் தம்பிரான் புலவர்)
என்று அப்புலவர் பெருந்தகை இரங்குதலைக் காணும் போது நம் இதயம் வேதனையில் ஆழ்கின்றது. நம் தமிழ் சமூதாயத்தில் கற்றவர்கள் பெருக வேண்டும். கவிவாணவர்களுக்கு வாரி வழங்கும் தானவான்கள் தொகை அதிகரிக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுவோமாக. புலவர் இராமச்சந்திரக் கவிராயர் கூறுகின்றார் கல்லாத மூடனைக் கல்விமான் என்று பாராட்டினேன். காட்டுமிராண்டியை நாட்டை ஆளும் அரசனாவாய் என்று புகழ்ந்து போற்றினேன். பொல்லாத கெடுமதியுடைய ஒருவனை நான் நல்லாய் என்றேன். போர்முனையை என்றும் அறியாத ஒரு கோழையை ஆண்புலி போன்ற வீரபராக்கிரமன் என்று பாராட்டினேன். சூம்பிய புயமுடைய ஒருவனை மற்போரில் வல்லவன் என்றேன். ஈயாத லோபியை நான் வாய் கூசாமல் வள்ளல் என்று போற்றினேன். இப்படி ஒருவனிடம் இல்லாத பெருமைகளைச் சொன்னதால் உனக்கு ஒன்றும் தரமாட்டேன் போ என்று என்னை விரட்டினான். நான் செய்த தவறுகளை எண்ணி இப்போது வருந்துகிறேன் என்று பல கொடாக் கண்டர்களிடம் போய் பாட்டிசைத்து வெறுங்கையுடன் திரும்பிய இராமச்சந்திர கவிராயர் பின்வரும் பாடல் மூலம் தன் கசப்பான அனுபவத்தைக் கூறுகிறார்.
கல்லாத ஒருவனை நான்
கற்றோனென்றேன்
காடெறியும் மறவனை
நாடாள்வாய்யென்றேன்
பொல்லாத ஒருவனை நான்
நல்லாய் என்றேன்
போர்முகத்தை அறியானைப்
புலியே யென்றேன்
மல்லாகும் புயமென்றேன்
சும்பற்றோளை
வழங்காத கையானை
வள்ளலென்றேன்
இல்லாத சொன்னனுனக்கில்லை
யென்றான்
ஏங்குகிறேனென் குற்றத்தை
எண்ணி எண்ணி.....
(இராமச்சந்திர கவிராயர்)
புலவர் இரட்டையர் தம் அனுபவத்தைக் கூறுகின்றபோது ஆடும் தெய்வமான இறைவனை மத்திஸ்தத்துக்கு அழைக்கிறார். அவர் சொல்கிறார் தென்புலியூரில் அமர்ந்து அருள் பாலிக்கும் இறைவா மகாலட்சுமி போன்ற அழகுவாய்ந்த பெண்ணை சிங்காரித்து மேலும் அழகுறச் செய்தாலும் அவள் கணவன் இரண்டு கண்களும் பார்வை இழந்த குருடனாக இருந்தால் அந்தப் பெண்ணின் வனப்பால் யாது பயன்-அதுபோல் கல்லாத மூடரிடம் சொற்சுவை, பொருட்சுவை மிகுந்த பாடல்களைப் பாடுவதில் யாது பயன் என்று எண்ணி மனம் நொந்த புலவர்களில் பெரும்பாலர் இனி அற்ப மனிதர்களை ஏற்றிப் பாடுவதில்லை. மகா தேவனான இறைவனைப் பாடுவதில் தான் ஆன்ம திருப்தியுண்டு என்று எண்ணி மனம் தேறி அந்தப்பரம் பொருளைப் போற்றிப் பாக்களைச் சொரியலானார்கள்.
மூடர் முன்னே பாடேன்
மொழித்தாலறிவானே
ஏடெடுத்த தென்புலியூர்
அம்பலவ ஆடகப்பொருளே
செந்திருவைப் போலணங்கை
சிங்காரித்தென்ன பயன்
அந்தகனே நாயகனானால்..........
(புலவர் இரட்டையர்)


தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:



  1. புலவர் பெருமக்கல் (Great People of Poet)
    http://ulikininpin09.tumblr.com/

    ---------------------------------------------------------------------------


    புலவர் பெருமக்கல்
    (Great People of Poet)


    [01] அஞ்சியார் =
    அஞ்சில் அஞ்சியார்
    [02] அனிலார் =
    அனிலாடு முன்ரிலார்
    [03] அவ்வய்யார்
    [04] ஆதியார் =
    ஆதிமந்தியார்
    [05] ஆரித்தியார் =
    வருமுலய்யாரித்தியார்
    [06] உத்திரய்யார் =
    பூங்கன் உத்திரய்யார்
    [07] ஊட்டியார்
    [08] ஊன்பொதிப் பசுங்கூடய்யார்
    [09] எயிட்ரியார் =
    கலார்க்கீரன் எயிட்ரியார்
    [10] எயினியார் =
    (1) குரிஞ்சி மகலார் இலவெயினியார்
    (2) குரிஞ்சி மகலார் குரிப்பெயினியார்
    (3) பேய்ப் பாடினியார் இலவெயினியார்
    [11] ஓரம்போகியார்
    [12] ஓரில்பிச்சய்யார்
    [13] கன்னகய்யார் =
    (1) தாயங் கன்னகய்யார்
    (2) பொதும்பில் புல்லாலங் கன்னகய்யார்
    (3) னக்கன்னகய்யார்
    (பெருங்கோலினாய்க்கர் மகலார் னக்கன்னகய்யார்)
    (4) முடத்தாமக் கன்னகய்யார்
    (5) வெரிபாடிய கன்னகய்யார்
    [14] காவல்பென்டு
    [15] சாத்தியார் =
    ஒக்கூர் மாசாத்தியார்
    [16] செல்லய்யார் =
    காக்கய்ப் பாடினியார் னல்செல்லய்யார்
    [17] தய்யலார் =
    னெடும்பல்லியத்தய்யார்
    [18] பசலய்யார் =
    (1) காமக்கனிப் பசலய்யார்
    (2) குமுலியார் னப்பசலய்யார்
    (3) போந்தய்ப் பசலய்யார்
    (4) மாரோக்கத்து னப்பசலய்யார்
    [19] பாரி மகலிர்
    [20] பித்தியார் =
    (1) ஊன்பித்தய்யார்
    (2) மாரிப்பித்தியார்
    [21] பூதியார் =
    (1) முல்லியூர்ப் பூதியார்
    (2) வென்பூதியார்
    (3) வென்மனிப் பூதியார்
    [22] பெருங்கோப்பென்டு
    [23] பொன்னியார் =
    (1) பொன்மனியார்
    (2) பொன்முடியார்
    [24] னாகய்யார் =
    (1) அஞ்சி அத்தய் மகலார் னாகய்யார்
    (2) கச்சிப்பேட்டு னல்னாகய்யார்
    (3) னல்னாகய்யார்
    [25] னெட்டிமய்யார்
    [26] முருவலார் =
    பேரெயில் முருவலார்
    [27] முல்லய்யார் =
    அல்லூர் னன்முல்லய்யார்
    [28] வென்னியார் =
    வென்னிக் குயத்தியார்
    [29] வெல்லியார் =
    (1) மதுரய் மேலய்க்கடய்யத்தார் னல்வெல்லய்யார்
    (2) னல்வெல்லியார்
    (3) வெல்லிவீதியார்



    ---------------------------------------------------------------------------



    பார்வய்: வலய்ப்பூ (tumblr.com)
    [1] தமிலரின் தேசியக் கொடி (National Flag of Tamilar)
    http://gvetrichezhian.tumblr.com/
    [2] வரிவடிவமும் ஒலிவடிவமும் (Line Format & Sound Format)
    http://gvetrichezhian01.tumblr.com/
    [3] கனினி அகரமுதலி (computer dictionary)
    http://gvetrichezhian02.tumblr.com/
    [4] கூ+தமிலு (G+TAMILU)
    http://gvetrichezhian03.tumblr.com/
    [5] சொல்லாக்கம் (Word Formation)
    http://ulikininpin04.tumblr.com/
    [6] இலக்கியக் காட்சி (Literary Scene)
    http://ulikininpin05.tumblr.com/
    [7] கூ+தமிலு பாகம்:2 (G+TAMILU Part:2)
    http://ulikininpin06.tumblr.com/
    [8] கூ+தமிலு பாகம்:3 (G+TAMILU Part:3)
    http://ulikininpin07.tumblr.com/
    [9] என விரும்பினோம் (Desired As)
    http://ulikininpin08.tumblr.com/


    ReplyDelete