
உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொகையான மக்கள் தொழில் செய்து ஊதியம் பெற்று உயிர் வாழவும் உலகில் பல விதமான தொழில்கள் இருக்கின்றன் ஆயினும் சிலர் உலகில் உள்ள எல்லாவற்றிலும் கல்வியே சிறந்த தென்று ஆராய்ந்து அறிந்து கல்வியை கசடறத் துறைபோகக் கற்று பாண்டித்தியம் எய்தி ஆற்றல் மிக்க கவிவாணர்களாக அழகும் அறிவுமிக்க கவிதைகள் புனைந்து மனித குலத்தை நெறிப்படுத்தும் பெரும்தொண்டு புரிந்து வருகின்றனர். மானிட சமூதாயத்தின் சீலமான நல்வாழ்வுக்காக தங்கள் முழுக்காலத்தையும் செலவிட்டு வரும் படித்த மேதைகளான புலவர் பெருமக்கள் தங்கள் வாழ்வைக் கழிக்கும் நோக்கில் பொருள் தேடுவதென்பது இயலாத காரியம்.