Saturday, February 28, 2009

‘ரங்கநாயகியின் காதலன்’

 தம்பலகாமம்
{குறுநாவல்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,திருகோணமலை.

தம்பலகாமம் பெற்றெடுத்த தவப்புதல்வன் க. வேலாயுதம் அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடான கவின் தமிழ் 2004 மலரினூடாகவே எனக்குக் கிடைத்தது. அந்த அற்புதமான கவிகளையும் ஆற்றல்படைத்த ஒரு இலக்கியவாதியையும் இன்றுவரை அறியாமல் இருந்த எனக்கு கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அண்ணனின் குறிப்புக்கள் அவரைப் பற்றியும், அவரது இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் அறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

வரலாற்று ஆசிரியராகவும், கூத்துக்கலை விற்பன்னராகவும், நல்ல கவிவல்லோனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறிமுகமான தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் ~ரங்கநாயகியின் காதலன் என்ற குறுநாவல் என்னை ஒருகணம் பிரமிப்படைய வைத்துவிட்டது.
ஆக்க இலக்கியத் துறையில் புனைகதை வகை சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்துவிடக்கூடிய ஒரு இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் காலத்தின் பதிவாகவும், ஒரு குறித்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக அசைவியக்கம் என்பவற்றை மிக எளிய நடையில் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியவகையில் எடுத்துக்கூறும் புனைகதை வடிவமான குறுநாவலினூடாக மிக எளிமையான முறையில் அக்கால இலக்கிய பேச்சு வழக்கு நடையில் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ~ரங்கநாயகியின் காதலன் ஊடாக வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

ரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித் திறனும் எவ்வாறு ஈழத்தி;ல் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருப்பது ஈழத்தில் ஆட்சி நிலவியமைக்கான வரலாற்றுச் சான்றாதாரமாகவும் விளங்குகின்றது.

தம்பலகாமத்தின் சிறப்பையும் அங்கே அந்த அழகிய கிராமத்தை மருவிச் செல்லும் குடமுருட்டியாற்றையும், இயற்கை அழகின் எளிமையையும் வாசகர்களின் மனங்களில் மிக இலாவகமாகப் பதியச் செய்துள்ளார்.

ஈழத்தில் தமிழர் ஆட்சி ஒன்று இருந்ததா? என்ற வரலாற்றுத் திரிபு வழிகளுக்கு ஆப்புவைப்பதுபோல் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் இக்குறுநாவலினூடாக ஆங்காங்கே 800 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் வாழ்ந்த அவர்களால் ஆட்சிசெய்யப்பட்ட பிரதேசங்களை இன்று ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டன என்ற தகவல்களை இந்தக் குறுநாவலினூடாக அறிய முடிகின்றது.

தம்பலகாமம் நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது ~தமிழர் பட்டணம் என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சுகளும் ஒரு கணம் நிமிர்கின்றன.

ரங்கநாயகியின் காதலை உணர்வுபூர்வமாக இக்குறுநாவலினூடாக வளர்த்துச் சென்று இறுதியில் வாசகர்களின் நெஞ்சங்களைக் கனக்கச் செய்யும் வகையில் கதையை முடித்து அவளது வரலாற்றை தம்பலகாமம் ஆதிகோணேசர் ஆலயத்துடன் முடித்து வைப்பது முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.

ஒரு கலைஞனை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையைச் செயல்படுத்தும் வகையில் கலாபூஷணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியச் சோலையின் வெளியீடாக ~~ரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவலைத் தந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளத்திற்கு அணிசேர்த்துள்ளார். அந்த வகையில் திருகோணமலையில் அவரால் ஆற்றப்பட்டு வரும் இலக்கியப் பணி, தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவர் உள்ளங்களையும் நிறைவு செய்யும் என்பது மட்டும் நிதர்சனம்!

வல்வை.ந. அனந்தராஜ் 
திருக்கோணமலை.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

5 comments:

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  2. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  3. \\ஒரு கலைஞனை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையைச் செயல்படுத்தும் வகையில் கலாபூஷணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியச் சோலையின் வெளியீடாக ~~ரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவலைத் தந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளத்திற்கு அணிசேர்த்துள்ளார். அந்த வகையில் திருகோணமலையில் அவரால் ஆற்றப்பட்டு வரும் இலக்கியப் பணி, தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவர் உள்ளங்களையும் நிறைவு செய்யும் என்பது மட்டும் நிதர்சனம்!\\
    உன்மைதான் அண்ணா.....

    ReplyDelete