{குறுநாவல்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,திருகோணமலை.
தம்பலகாமம் பெற்றெடுத்த தவப்புதல்வன் க. வேலாயுதம் அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடான கவின் தமிழ் 2004 மலரினூடாகவே எனக்குக் கிடைத்தது. அந்த அற்புதமான கவிகளையும் ஆற்றல்படைத்த ஒரு இலக்கியவாதியையும் இன்றுவரை அறியாமல் இருந்த எனக்கு கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அண்ணனின் குறிப்புக்கள் அவரைப் பற்றியும், அவரது இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் அறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
வரலாற்று ஆசிரியராகவும், கூத்துக்கலை விற்பன்னராகவும், நல்ல கவிவல்லோனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறிமுகமான தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் ~ரங்கநாயகியின் காதலன் என்ற குறுநாவல் என்னை ஒருகணம் பிரமிப்படைய வைத்துவிட்டது.