வாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது.
வழிபடத் தயாரென்றால் வாருங்கள், திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். அல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம்.
வழிபடத் தயாரென்றால் வாருங்கள், திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். அல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம்.
ஆலடி விநாயகர் ஆலயம்
அமைவிடம் :- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர் ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும். வரலாறு ;- சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாத்தளையிலிருந்து வியாபார நிமிர்த்தம் வந்தவர்கள் ஐயனார் கேணியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
சிறப்பம்சம் ;- கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
திருவிழாக்கள்;- சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.
{ மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. }
திருக்கோணேசர் ஆலயம் அமைந்திருக்கும் கோணமலை
ஆலயமுகப்பு
{ மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. }
திருக்கோணேசர் ஆலயம் அமைந்திருக்கும் கோணமலை
ஆலயமுகப்பு
படங்கள் நன்றாக உள்ளன.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
blog நல்ல colorful ஆக இருக்கு.
படங்களுக்கு நன்றி. தரிசனங்கள் தொடரக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteநன்றி வாசுகி அவர்களே
ReplyDeleteசாமிகளின் வீதியெங்கும் ஆமிகளாய் இருக்க ஆண்டவர்களும் அகதிகள் தானே ஜீவன்.
ReplyDeleteபடங்களுக்கு நன்றிகள்.
ஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.
சாந்தி
thanks. Could you post some photos of mutthukkumarasamy kovil & Hindu College.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி அவர்களே
ReplyDeleteபதிவும், புகைப்படங்களும் அருமை!
ReplyDeleteபதிவும், படங்களும் அருமை!
ReplyDelete///ஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.////
ReplyDeleteநன்றி சாந்தி அவர்களே
Could you post some photos of mutthukkumarasamy kovil & Hindu College.
ReplyDeleteவருகைக்கு நன்றி -/r.
முடியுமானவரை முயற்சிக்கிறேன்.
தாங்கள் இந்துக்கல்லூரியிலா கல்விகற்றீர்கள்.?
நன்றி VSK
ReplyDelete/தாங்கள் இந்துக்கல்லூரியிலா கல்விகற்றீர்கள்?/
ReplyDeleteஓம். தனியஞ்சலிலே தொடர்புகொள்கிறேன்
தட்சணா கைலாய தலமுறு ஒளிநிழல்கள்
ReplyDeleteகூட்டியே யிணையமதில் கண்களால் தரிசிக்க
காட்டிய தமிழன்பர் ஜீவராஜ் பணிகள் யாவும்
வாழ்விலே நீடுபெற்று வகையுடன் வாழ்வர்
திருகோணமலையிலுள்ள ஆலயங்கள் பற்றிய அறிமுகம் மிகவும் பயனுள்ளது.
ReplyDeletenanri!
ReplyDeleteநன்றி லம்போதரன் அவர்களே
ReplyDeleteஉங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது...
நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே
ReplyDeleteநன்றி பெயரிலி
ReplyDeleteநன்றி லம்போதரன் அவர்களே
ReplyDeleteமுதல் வணக்கம் ஜீவனுக்கு மேலும் அருமையான படங்களை இணைத்தமைக்கு நன்றிகள் பல.....
ReplyDeleteமேலும் படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்
Nanri Jeevan.
ReplyDeleteI was born in Trincomalee.You recall all my past memories.
நன்றிகள் யாழவன், Ithayachandran
ReplyDeleteseithigalum padangalum arumai
ReplyDeleteI'm Dhanagopal from India. All the pictures are very nice and God is great.
ReplyDeleteGod may bless you Mr Jeevan.
Keep it up.
thanks Dhanagopal
ReplyDeleteமுடிந்தால் சிவன் கோவில்,காந்திமாஸ்டர் போன்றவர்களின் படங்கள் இணைக்கவும்
ReplyDeleteநன்றி லம்போ அவர்களே
ReplyDeletethanks enpaarvaiyil
i couldnt comment y????
ReplyDeleteSukesh
தரிசனம் அருமை!
ReplyDeleteநன்றி சுபா அவர்களே
ReplyDeleteபதிவிலிட்ட அத்தனை படங்களும் அருமை....நீண்ட காலத்திற்குப் பின்பு ஆலயப் படங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..நன்றி ஜீவராஜ்.
ReplyDelete