மனதுமறக்காத நாளானது
மார்கழி இருபத்தாறு
துறைமுக அலை
துயரத்தின் பேரலையானது
ஆழிப்பேரலை நம்
ஊரை உலுக்கியது
உறவுகளைப் பிரித்து
உடமைகளை உருக்குலைத்தது.
இயற்கையால் வந்ததினால்
இழப்புகளின் விபரங்கள்
மூடிமறைப்பில்லாது
இயல்பாக (வெளி) வந்ததது.
அதிகார வர்க்கங்களும் கொஞ்சம்
அதிர்ந்துதான் போயின
கோசங்கள் தாண்டி
வாழ்தலுக்கான போராட்டத்தின்
வலிதனை உணர்ந்தன
சமாதான, சகோதரத்துவ
வாழ்வுபற்றிய சலனங்கள்
அடிமட்ட மக்களுக்குள்
அகலக்கால் பதித்தன
இழப்புகள் பெரிதாய் வரும்வரை
புரிவதில்லை உயிர்
இருப்புகளின் பெறுமதி
நம்பிக்கை வந்ததது
முரண்பாடுகள் நீங்கி
வருங்காலம் நமக்கு
வழமாய் அமையுமென்று
ஞாபகப்படுத்துங்கள் இந்த
நான்காண்டுக்குள்
நாம்பார்த்த அழிவுகள் எத்தனை
கொஞ்சம் யோசியுங்கள்
வாசிக்கக்கிடைத்த
வன்மங்கள் எத்தனை
உதிரம் தோய்ந்த உலகில்
உடமையழிவுக்கேதும் கணக்கிருக்கா?
மறக்கவிடாமல் அடிக்கடி
வருவதாய்ச் சொல்கிறார்கள்
சுனாமி - இருந்தும் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்றோடு தொலைந்துபோன
அன்புள்ளங்களை......
நெஞ்சிலடித்து
கடலுக்குச் சாபமிட்டவர்களே
சொல்லுங்கள்....
என்ன வித்தியாசம்
சுனாமிக்கும் நமக்கும்
மார்கழி இருபத்தாறு
துறைமுக அலை
துயரத்தின் பேரலையானது
ஆழிப்பேரலை நம்
ஊரை உலுக்கியது
உறவுகளைப் பிரித்து
உடமைகளை உருக்குலைத்தது.
இயற்கையால் வந்ததினால்
இழப்புகளின் விபரங்கள்
மூடிமறைப்பில்லாது
இயல்பாக (வெளி) வந்ததது.
அதிகார வர்க்கங்களும் கொஞ்சம்
அதிர்ந்துதான் போயின
கோசங்கள் தாண்டி
வாழ்தலுக்கான போராட்டத்தின்
வலிதனை உணர்ந்தன
சமாதான, சகோதரத்துவ
வாழ்வுபற்றிய சலனங்கள்
அடிமட்ட மக்களுக்குள்
அகலக்கால் பதித்தன
இழப்புகள் பெரிதாய் வரும்வரை
புரிவதில்லை உயிர்
இருப்புகளின் பெறுமதி
நம்பிக்கை வந்ததது
முரண்பாடுகள் நீங்கி
வருங்காலம் நமக்கு
வழமாய் அமையுமென்று
ஞாபகப்படுத்துங்கள் இந்த
நான்காண்டுக்குள்
நாம்பார்த்த அழிவுகள் எத்தனை
கொஞ்சம் யோசியுங்கள்
வாசிக்கக்கிடைத்த
வன்மங்கள் எத்தனை
உதிரம் தோய்ந்த உலகில்
உடமையழிவுக்கேதும் கணக்கிருக்கா?
மறக்கவிடாமல் அடிக்கடி
வருவதாய்ச் சொல்கிறார்கள்
சுனாமி - இருந்தும் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்றோடு தொலைந்துபோன
அன்புள்ளங்களை......
நெஞ்சிலடித்து
கடலுக்குச் சாபமிட்டவர்களே
சொல்லுங்கள்....
என்ன வித்தியாசம்
சுனாமிக்கும் நமக்கும்
த.ஜீவராஜ்
///ஞாபகப்படுத்துங்கள் இந்த
ReplyDeleteநான்காண்டுக்குள்
நாம்பார்த்த அழிவுகள் எத்தனை
கொஞ்சம் யோசியுங்கள்
வாசிக்கக்கிடைத்த
வன்மங்கள் எத்தனை
உதிரம் தோய்ந்த உலகில்
உடமையழிவுக்கேதும் கணக்கிருக்கா?/////
நன்றி கலை - இராகலை
ReplyDelete//துயரத்தின் பேரலையானது//
ReplyDeleteமறக்க முடியாத ஒன்று
//மறக்க முடியாத ஒன்று//
ReplyDeleteநன்றி SUREஷ் அவர்களே
மறக்கவிடாமல் அடிக்கடி
ReplyDeleteவருவதாய்ச் சொல்கிறார்கள்
சுனாமி - இருந்தும் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்றோடு தொலைந்துபோன
அன்புள்ளங்களை......
நெஞ்சிலடித்து
கடலுக்குச் சாபமிட்டவர்களே
சொல்லுங்கள்....
நன்றி கவின்
ReplyDelete// இழப்புகள் பெரிதாய் வரும்வரை
ReplyDeleteபுரிவதில்லை உயிர்
இருப்புகளின் பெறுமதி //
நச் கவிதை மற்றும் கருத்துகள். இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு. இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service" யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணையதள முகவரி http://www.ina.in/itws/
with care and love,
Muhammad Ismail .H, PHD
//இயற்கையால் வந்ததினால்
ReplyDeleteஇழப்புகளின் விபரங்கள்
மூடிமறைப்பில்லாது
இயல்பாக (வெளி) வந்ததது.//
நடப்பு நிலவரத்தை நச்சென உதைத்துள்ளது.
இன்னுயிரிழந்த அனைவருக்கும் ஆத்ம சாந்தி
நிலவ பிராத்திக்கிறேன்.
நீங்கள் எனது கவிதைக்கு அளித்த இந்த மறுமொழியை பதிவாக்கியுள்ளேன். இதுநாள்வரை
ReplyDelete///மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு ///
என்றவுடன் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள செய்தி ஊடகங்களை மட்டுமே நம்பி இருந்த என்போன்றோருக்கு அத்தகவல் மிகவும் பயனுடையதாக இருக்கும் என நம்பகிறேன்
நன்றி.
அன்புடன் ஜீவன்...
////இன்னுயிரிழந்த அனைவருக்கும் ஆத்ம சாந்தி
ReplyDeleteநிலவ பிராத்திக்கிறேன்.///
நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)
இயல்பான நடையில் இதயத்தின் குமுறல்கள் அந்த கடல் அலைகள் போலவே கொந்தளித்து எழுந்துள்ளன.
ReplyDelete//நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்றோடு தொலைந்துபோன
அன்புள்ளங்களை......//
உண்மைதான்:(!
நன்றி ராமலக்ஷ்மி அவர்களே
ReplyDelete