Thursday, January 01, 2009

சுதந்திரம்....


விழிபிதுங்கி இருக்கிறேன்
என் எண்ணங்களை
எழுத்துருவாக்கும் வழி தெரியாது


சந்தங்கள், அர்த்தங்கள்
தவிர்த்து நிறைய
யோசிக்கவேண்டி இருக்கிறது

எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கணமும்
ஆயிரம் கண்கள் - என் எழுத்தை
வெறித்துப் பார்ப்பதாய் ஓர் பிரமை

எப்படி வரும்?
ஈட்டிகளுக்கு நடுவில்
இயல்பான கவிதை

நாட்டு நடப்புகளை
எழுதத் தொடங்கையில்
வரண்டு கொள்கிறது – நா

நெஞ்சில் பொறுத்திருக்கிறது
எழுதி முடித்ததும்
இருப்பேனா? என்ற பயம்

பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து
என்ன சாதித்துவிட முடியும்
இருப்பதை எழுதாமல்





வெறுத்துப் போய்
எழுந்து சென்றேன்
முடிந்திருந்தது பூசை
பூட்டிய கோயிலுக்குள் பிள்ளையார்

சலித்துப் போய் விசாரித்ததில்
திறந்திருந்தால்
திருடர் பயம் என்றார்கள்

கடவுளே என்று
எட்ட நின்று கும்பிடுகையில்
கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
ஆன்ம விடுதலைக்காய்
வேண்டுவது போல் இருக்கிறது.

எழுத்துக்கு மட்டுமல்ல –
என்னைப் பொறுத்தமட்டில்
எல்லாவற்றுக்கும்
தேவைப்படுவது போல் இருக்கிறது
சுதந்திரம்.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

52 comments:

  1. சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே
    எப்படி உங்களால் முடிகிறது
    இவ்வளவு அழகாக , இயல்பாக
    கவிதை எழுத முடிகிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. "எப்படி வரும்?
    ஈட்டிகளுக்கு நடுவில்
    இயல்பான கவிதை"

    இயல்பான கவிதையுமில்லை இயல்பான வாழ்வுமில்லாமல் நிலமை.

    நாட்டு நடப்புக்களை எழுத முயலும் எல்லாக் கைகளையும் அடக்குமுறையாளர்கள் முடக்கி வைத்திருக்க இயல்பாய் எதுவுமே எங்களுக்கு இல்லை.

    சாந்தி

    ReplyDelete
  3. //எழுத்துக்கு மட்டுமல்ல –
    என்னைப் பொறுத்தமட்டில்
    எல்லாவற்றுக்கும்
    தேவைப்படுவது போல் இருக்கிறது
    சுதந்திரம்.//

    ஆம் உண்மையே என அழகாய் விளக்குகின்றன் ஏனைய வரிகள்.

    நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //எழுத்துக்கு மட்டுமல்ல –
    என்னைப் பொறுத்தமட்டில்
    எல்லாவற்றுக்கும்
    தேவைப்படுவது போல் இருக்கிறது
    சுதந்திரம். //

    கண்டிப்பாக தேவை தான் ஜீவன்

    ReplyDelete
  5. வெறுத்துப் போய்
    எழுந்து சென்றேன்
    முடிந்திருந்தது பூசை
    பூட்டிய கோயிலுக்குள் பிள்ளையார் செமத்தியா எளிதியிரிக்கிக!

    ReplyDelete
  6. ///எழுத்துக்கு மட்டுமல்ல –
    என்னைப் பொறுத்தமட்டில்
    எல்லாவற்றுக்கும்
    தேவைப்படுவது போல் இருக்கிறது
    சுதந்திரம். ///

    உண்மை தான் அண்ணே

    ReplyDelete
  7. நன்றி திகழ்மிளிர்
    உங்களது வாழ்த்துகளுக்கு....

    ReplyDelete
  8. நன்றி சாந்தி அவர்களே
    உங்கள் ஆதங்கங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது..
    முடியுமானவரை எங்கள் வலிகளையும், வேதனைகளையும் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்...

    ReplyDelete
  9. நன்றி ராமலக்ஷ்மி அவர்களே..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்
    \\கடவுளே என்று
    எட்ட நின்று கும்பிடுகையில்
    கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
    ஆன்ம விடுதலைக்காய்
    வேண்டுவது போல் இருக்கிறது.

    எழுத்துக்கு மட்டுமல்ல –
    என்னைப் பொறுத்தமட்டில்
    எல்லாவற்றுக்கும்
    தேவைப்படுவது போல் இருக்கிறது
    சுதந்திரம். \\

    உண்மையான உணர்வினை சொல்லும் கவிதை .
    வாழ்த்துக்கள் , வரவேற்கிறேன் .

    ReplyDelete
  11. நன்றி பிரேம்குமார்

    ReplyDelete
  12. arumai nanbare...

    ReplyDelete
  13. KADAVALUKKUM VENDUM SUDHANTHIRAM

    ReplyDelete
  14. நன்றி உருப்புடாதது_அணிமா

    ReplyDelete
  15. //கடவுளே என்று
    எட்ட நின்று கும்பிடுகையில்
    கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
    ஆன்ம விடுதலைக்காய்
    வேண்டுவது போல் இருக்கிறது. ///

    இங்குதான் உங்கள் கவிதையின் வீச்சு புரிகிறது! அருமை! வாழ்த்துகள்!

    கரிசல்

    ReplyDelete
  16. hmmm!
    fantastic! unmai! sudanthiram nichayam vendum!

    ReplyDelete
  17. நன்றி தனசேகர்
    உங்கள் உணர்விர்க்கு...

    ReplyDelete
  18. நன்றி சசிதரன்

    ReplyDelete
  19. உண்மைதான் நண்பரே....{SUBRAMANIAN }

    ReplyDelete
  20. நன்றி கரிசல் உங்கள் வாழ்த்துரைக்கு..

    ReplyDelete
  21. அருமை! வாழ்த்துகள்

    raju

    ReplyDelete
  22. //கடவுளே என்று
    எட்ட நின்று கும்பிடுகையில்
    கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
    ஆன்ம விடுதலைக்காய்
    வேண்டுவது போல் இருக்கிறது.
    //


    very nice.........

    ReplyDelete
  23. கண்டிப்பாக தேவை....சுதந்திரம்...!
    உங்களுடைய எல்லா படைப்புகளுமே அருமை.

    ரமேஷ்

    ReplyDelete
  24. நன்றி ரமேஷ்
    உங்கள் வார்த்தை உற்சாகம் தருகிறது....

    ReplyDelete
  25. // கடவுளே என்று
    ..........................
    ..........................
    ..........................
    .................இருக்கிறது//

    Great lines


    Ashok

    ReplyDelete
  26. இது எப்படியென்றே விளங்கவில்லை,
    எனது கண்கள் இரண்டாவது வரிக்கு
    நகர இயலாது ரணமும் சோகமும்
    குழைத்த கவிதையில் சிக்குகிறது.
    எட்டாத தூரத்துக்கு என் சுட்டுவிரல்
    நீள்கிறது.

    ReplyDelete
  27. இது எப்படியென்றே விளங்கவில்லை,
    எனது கண்கள் இரண்டாவது வரிக்கு
    நகர இயலாது ரணமும் சோகமும்
    குழைத்த கவிதையில் சிக்குகிறது.
    எட்டாத தூரத்துக்கு என் சுட்டுவிரல்
    நீள்கிறது.

    ReplyDelete
  28. உங்கள் அன்புக்கு நன்றி தோழரே

    என்ன செய்வது இப்படியொரு வாழ்க்கை வாய்த்திருக்கிறது எங்களுக்கு.எனது சமூகத்தின் இன்றைய நிலையினை முடிந்த வரையில் எழுத்துருவாக்க முனைகிறேன்.

    என்றும் அன்புடன்ஜீவன்...

    ReplyDelete
  29. கடவுளே என்று

    > எட்ட நின்று கும்பிடுகையில்
    > கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
    > ஆன்ம விடுதலைக்காய்
    > வேண்டுவது போல் இருக்கிறது


    கடவுளின் சிலையை தானே கைது செய்து பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்.கடவுள்
    எப்பொழுதும் போல் அண்ட வெளியில் அவராகவே இருக்கிறார் .

    எல்லாவற்றுக்கும்
    தேவைப்படுவது போல் இருக்கிறது
    சுதந்திரம்.


    இயல்பான கவிதை ஜீவன் .

    ReplyDelete
  30. அன்பினிய ஜீவராஜ்,

    இந்த கவிதையின் ஆரம்பம் மிக சாதாரணமாக இருந்தாலும்


    //கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
    ஆன்ம விடுதலைக்காய்
    வேண்டுவது போல் இருக்கிறது//


    என்ற மூன்று வரிகள்... ஒரு நிமிடம் எனது மூச்சை நிறுத்திற்று.


    கல்லை மட்டும் கண்டால்
    கடவுள் தெரியாது


    - என்ற வாலி ஐயாவின் பாடல் வரிகளையே இதற்கு பதிலாக தந்தாலும் பதில் தந்த
    நிறைவினிறி தவிக்கிறது எனது பின்னூட்டம்.


    அடிப்படையில் சுதந்திரமின்மையின் பாதிப்பு என்ற கவலையான உண்மை உங்கள்
    எழுத்துக்களில் தென்படுகிறது.


    சுதந்திரம் எல்லைகளிலோ அரசியலிலோ இல்லை, அது இருப்பது இதயத்தில் தான்
    என்பது என் தாழ்மையான கருத்து.


    உங்கள் ஆன்மாவும் சுதந்திரமாய் மகிழ இறைவன் அருளட்டும்


    தொடர்ந்து எழுதுங்கள். நானும் உங்கள் கவிதைகளின் ரசிகன்


    இனிய வாழ்த்துக்களுடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  31. //கடவுளே என்று
    எட்ட நின்று கும்பிடுகையில்
    கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
    ஆன்ம விடுதலைக்காய்
    வேண்டுவது போல் இருக்கிறது.//


    சரியான வரிகள் அண்ணா


    அன்புடன்
    நிவே :)

    ReplyDelete
  32. ////கடவுளின் சிலையை தானே கைது செய்து பாதுகாப்பாய்
    வைத்திருக்கிறோம்.கடவுள்
    எப்பொழுதும் போல் அண்ட வெளியில் அவராகவே இருக்கிறார் .///

    நன்றி பூங்குழலி அவர்களே
    இருந்தும் மனம் சஞ்சலப்படும் நேரங்களில் ஆலயங்களின் தேவை உணரப்படுவது
    போல் இருக்கிறது...


    அன்புடன் ஜீவன்....

    ReplyDelete
  33. அன்பின் ஜீவராஜ்


    அருமையான கவிதை = நல்ல சிந்தனை - வளமையான சொற்கள்.


    சுதந்திரத்தின் மதிப்பினை உணர்த்தும் கவிதை


    நல்வாழ்த்துகள்


    அன்புடன் ..... சீனா

    ReplyDelete
  34. நன்றி சுரேஷ் அவர்களே

    ////தொடர்ந்து எழுதுங்கள். நானும் உங்கள் கவிதைகளின் ரசிகன்////


    உங்களது வார்த்தை தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தைத் தருகிறது..


    இங்கு நிலமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது...


    ஏக்கம்,துக்கம் ஏன் இந்த
    வாழ்வென்ற விரக்தியோடு
    விடிந்துகொள்கிறது பகல்


    வீதி,வேலைத்தளங்கள்,
    பாடசாலை,பயணத்திலெல்லாம் –விதி
    எம்மீது ஒரு விழி வைத்திருக்கிறது


    சந்தோசமான சடங்குகளில்கூட
    எல்லோர் மனத்திலும் –தனித்துட்காந்திருக்கிறது
    எதிர்காலம் பற்றிய பயம்


    கண்ணயரும் போதெல்லாம்
    துப்பாக்கிச் சத்தங்கள்
    விழித்திருக்கிறது இரவு.


    பெரும்பாலும் இரவு 7 மணிக்குள் வீதிகள் வெறிச்சோடி விடுகின்றன..அதன்
    வெளிப்பாடுதான் இப்படி எழுத வைத்தது.


    ///.............ஆன்மாவும் சுதந்திரமாய் மகிழ இறைவன் அருளட்டும் /////


    உங்கள் வாக்குj பலிக்கட்டும்...


    அன்புடன் ஜீவன்...

    ReplyDelete
  35. /////அருமையான கவிதை = நல்ல சிந்தனை - வளமையான சொற்கள். ////

    நன்றி சீனா அவர்களே


    அன்புடன் ஜீவன்

    ReplyDelete
  36. மிக அருமையான கருத்து அய்யா


    "கடவுள் படைத்த உலகில் சுதந்திரமாய் மனிதன்
    மனிதன் படைத்த கோவிலுக்குள் மாட்டிக்கொண்டான் இறைவன்"

    ReplyDelete
  37. உங்களுடைய கவிதையில் வார்த்தைகளை பயன்படுத்தும் விதம் அருமை....

    மிக எழுச்சிமிக்க ஒரு விஷயத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.....


    வாழ்த்துகள் ஜீவன்....

    ReplyDelete
  38. ////"கடவுள் படைத்த உலகில் சுதந்திரமாய் மனிதன்
    மனிதன் படைத்த கோவிலுக்குள் மாட்டிக்கொண்டான் இறைவன்" ///
    அருமை...

    நன்றி துரை

    ReplyDelete
  39. ///மிக எழுச்சிமிக்க ஒரு விஷயத்தை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்..... ///

    நன்றி நட்சத்திரா அவர்களே


    அன்புடன் ஜீவன்

    ReplyDelete
  40. நாட்டு நடப்புகளை
    எழுதத் தொடங்கையில்
    வரண்டு கொள்கிறது – நா
    நிஜம் தான்

    ReplyDelete
  41. இயல்பான கவிதை

    ReplyDelete
  42. நன்றி கவின்

    ReplyDelete
  43. //எப்படி வரும்?
    ஈட்டிகளுக்கு நடுவில்
    இயல்பான கவிதை//

    இதோ வந்திருக்கே இயல்பான கவிதை.... உண்மைய சொல்லுங்க... ஈட்டிகள் இல்லையா?

    நீங்களூம் சுதந்திரத்தைத் தேடிட்டு இருக்கிங்களா?

    ReplyDelete
  44. Hi,

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
    Please check your blog post link here

    Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Thanks

    Valaipookkal Team

    ReplyDelete
  45. நன்றி A N A N T H E N


    உண்மைய சொல்லுங்க... ஈட்டிகள் இல்லையா?

    நெஞ்சில் பொறுத்திருக்கிறது
    எழுதி முடித்ததும்
    இருப்பேனா? என்ற பயம்

    நீங்களூம் சுதந்திரத்தைத் தேடிட்டு இருக்கிங்களா?
    ஆமாம், பாட்டன் காலத்தில் இருந்து.....

    ReplyDelete
  46. நண்பரே இன்றிருக்கும் வலியில் நாளையை மறக்காமல் இருப்போம்
    தெய்வத்தை தவிர வேறு எதை வேண்டி எவன் தரப்போறான் என்ற சந்தேகம் எனக்கும் தான்
    ஆயினும் இருக்கின்ற நாளை இனிமையாக்க முயற்சி செய்யுங்கள்
    அது கவிதை வடிவிலோ அல்லது கணணி வடிவிலோ...
    குண்டு சத்தத்திலும் தமிழோடு உறவாடுங்கள்
    அது உயிர் மூச்சிற்கு கொஞ்சம் உணவாகலாம் .
    அமெரிக்காவில் இருந்து கொண்டு
    அமைதியாக எழுதுகிறேன்
    ஆனால் உங்கள் இருதயத்தின் வலியை உணர்ந்து வேதனையுடன்தான்
    உங்கள் சகோதரி

    ReplyDelete
  47. உங்கள் இருதயத்தின் வலியை உணர்ந்து வேதனையுடன்தான் .....

    நன்றி kiruba pillai

    ReplyDelete