Tuesday, October 14, 2008

வலி வந்தவனுக்குத்தான் தெரியும்



முறிந்து போனதற்கு
முற்றுப்புள்ளி வைப்பதுதானே
முறையென்றாய்
எனக்கென்னவோ அது
முட்டாள்த்தனமாய்ப் படுகிறது

முடிந்ததும் மூடிவைப்பதற்கு – என்
காதலொன்றும்
கற்றல்களுக்கு மட்டுமான
புத்தகமல்ல அகராதி
அடிக்கடி திறந்து – என்
அகவாழ்வின் அர்த்தங்களைப்
புரிந்துகொள்ளுமிடம்

அது என்
கனவுகளின் திறவுகோல்
கவிதைகளின் உற்பத்தித்தானம்
என் வாழ்வில்
விரல்விட்டெண்ணக்கூடியதாய்
விடிந்திருந்த பொழுதுகள்

அது
அடுத்தவர்களால்
புரிந்துகொள்ளமுடியாத
சோகங்களின் தொகுப்பு
ஆன்மாவின்
அழுகையால் மட்டுமே
ஆறுதல்படுத்தக் கூடிய
வாழ்வியல் துன்பம்

தொலைந்து போனதற்காய்
துயர்கொள்ளல்
உடைந்துபோனதற்காய்
உருக்குலைதல் எல்லாம் - உலக
விலைகொள் பொருட்களுக்கு
மட்டுமான விதிகளல்ல
விலைபேசமுடியாத
இதயத்தின் தொலைவுகளுக்கும்
இதுபொருந்தும்

மன்னித்துக்கொள்
என்னால்
மரணத்திலும் - அவளை
மறக்கமுடியாது
உனக்குப்
புதிராக இருக்கும்

வலி
வந்தவனுக்குத்தான் தெரியும்
வார்த்தைகளால்
புரியவைக்கலாம் என்பது
பொய்
 த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. /முறிந்து போனதற்கு
    முற்றுப்புள்ளி வைப்பதுதானே
    முறையென்றாய்
    எனக்கென்னவோ அது
    முட்டாள்த்தனமாய்ப் படுகிறது/


    /வலி
    வந்தவனுக்குத்தான் தெரியும்
    வார்த்தைகளால்
    புரியவைக்கலாம் என்பது
    பொய்
    /


    ஒவ்வொரு வரியும் அருமை

    இயல்பாக இருக்கிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வலிவந்தவனுக்குத்தான் தெரியும்...உண்மை ஜீவன்
    இயல்பான கவிதை
    ஷைலஜா

    ReplyDelete
  3. நன்றி திகழ்மிளிர்

    உங்கள் ஒவ்வொரு வாழ்த்துரையும் உற்சாகம் தருகிறது.

    ReplyDelete
  4. ///இயல்பான கவிதை//

    நன்றி ஷைலஜா

    ReplyDelete
  5. வணக்கம் ஜீவன்

    ம்ம்ம்ம்........ உணர்வுகளை சொல்லமுடியுமென்று தோன்றவில்லை, கவிதை அர்புதம்

    குறிப்பிட்டு சொல்லவேண்டுமாயின் முழு கவிதையையும் குறிப்பிட வேண்டும்

    எனினும்
    கடைசி பத்தி (ஏனோ காப்பி பேஸ்ட் பண்ணமுடியவில்லை)
    கவிதையின் இதையம் இந்தவரிகள்தான்

    இராஜராஜன்

    ReplyDelete
  6. நன்றி இராஜராஜன்

    ReplyDelete