இது என் இறுதிக்கட்டம்
வாழ்க்கைப் பயணத்திற்கு
வரவிருக்கும் முற்றுப்புள்ளி
ஆட்டங்கள் அடங்கி ஆறடிக்குள்
அடைக்கலமாகும் முன்
ஆண்டவன் தந்த
அரிய சில நிமிடங்கள்
கணவனுக்காக கண்ணீர் விட்டாள்
மனைவி
தகப்பனுக்காக அழுதன
பிள்ளைகள்
உறவுக்காக ஒருகூட்டம் உருகியது
கடனுக்காகவும், இன்னபிறவுக்குமாக
யார்யாரோ அழுதார்கள்
எனக்குத் ‘திக்’ என்றது
என் எழுபது வருட வாழ்வில்
எனக்காக அழ
எவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று
எட்டடி தள்ளி
மெல்லிய விசும்பல்
விழி ஊன்றிப்பார்த்தேன்
என்வரவுப் பணத்தில்
ஏதோவோர் சிறுதொகையால் வளர்ந்த
ஏழைச்சிறுவன் இன்று
எஞ்சினியராய்
இப்போது
எனக்குள் நானே
அழுதுகொண்டேன் ஆனந்தமாக……
த.ஜீவராஜ்
"ஆனந்தக் கண்ணீர்" அருமையாக உள்ளது பாராட்டுக்கள் ஜீவா.
ReplyDeleteநன்றி ஈழவன்
ReplyDeleteவருகைக்கும் , பகிர்விர்க்கும்
//எனக்காக அழ
ReplyDeleteஎவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று.//
இதைப் படித்தவுடன் இனிமேலாவது எனக்காக அழும் உள்ளங்களைச் சேகரிக்கும் வழி தேட வேண்டும் எனத் தோன்றியிருப்பது உண்மை...
அன்புடன் அருணா
////இதைப் படித்தவுடன் இனிமேலாவது எனக்காக அழும் உள்ளங்களைச் சேகரிக்கும் வழி தேட வேண்டும் எனத் தோன்றியிருப்பது உண்மை...
ReplyDeleteஅன்புடன் அருணா///
நன்றி அருணா
அதற்காக எல்லாரையும் சும்மா அழவைக்கப்படாது.......
//எனக்குத் ‘திக்’ என்றது
ReplyDeleteஎன் எழுபது வருட வாழ்வில்
எனக்காக அழ
எவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று//
நல்ல கவிதை
இந்த வரிகள் சிந்திக்க வைக்கிறது நண்பரே ..
///இந்த வரிகள் சிந்திக்க வைக்கிறது நண்பரே ..//
ReplyDeleteநன்றி Vishnu...
ஆழமான கவிதை.
ReplyDeleteநன்றி பாஸ்கர்
ReplyDeleteஇதுவல்லவோ உண்மையான ஆனந்தம்...எதிர்பார்ப்பின்றி செய்யும் செயல்கள்தான் நிரந்தர
ReplyDeleteமகிழ்ச்சி தரும்.
எனக்குத் 'திக்' என்றது
ReplyDeleteஎன் எழுபது வருட வாழ்வில்
எனக்காக அழ
எவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று
அருமையான கவிதை
எனக்குத் 'திக்' என்றது
ReplyDeleteஎன் எழுபது வருட வாழ்வில்
எனக்காக அழ
எவரையும் சேகரிக்காமல்
போனேனெ என்று
அருமையான கவிதை
///இதுவல்லவோ உண்மையான ஆனந்தம்...எதிர்பார்ப்பின்றி செய்யும்
ReplyDeleteசெயல்கள்தான் நிரந்தர
மகிழ்ச்சி தரும். ///
ஆமோதிக்கிறேன் jmms
//அருமையான கவிதை
பூங்குழலி //
நன்றி உங்கள் பாராட்டுக்கு
அன்பின் தங்கராசா
ReplyDeleteஇன்று எத்தனையோ
பிள்ளைகள் தந்தையின்
சடங்கிற்கு நேரத்தோடு
வந்து நேரத்தோடு
போகின்றனர்.....
ஆனால்.. உதவிப் பணத்தில்
படித்த எஞ்னியர் அழுவது
அவரது நன்றிக்கடன்.
தெரிகின்றது..
வாழ்த்துக்கள் தங்கராசா
நன்றி இளங்கோ
ReplyDelete//எத்தனையோ
பிள்ளைகள் தந்தையின்
சடங்கிற்கு நேரத்தோடு
வந்து நேரத்தோடு
போகின்றனர்..... //
??? கடமை
அன்பின் ஜீவா
ReplyDeleteமனதைத் தொட்ட கவிதை
பிரதிபலன் எதிர்பாராது செய்கின்ற உதவி சாலச் சிறந்தது.
படிப்புக்கு உதவுவது - உதவி பெற்றவனால் சங்கிலித் தொடர் போல செல்லும்
தர்மம் தலை காக்கும்
நல்ல சிந்தனை
//தர்மம் தலை காக்கும் //
ReplyDeleteநன்றி சீனா அவர்களே
எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் நம் மீது ஒருவர் அன்பு செலுத்தும் பொது
ReplyDeleteபேரின்பம் உண்டாகும்
நல்ல கவிதை
சின்ன சின்ன மழைத்துளி போல
ReplyDeleteதனித் தனியாய் அனைத்தும் அருமை
நன்றி மதுமிதா
ReplyDelete//சின்ன சின்ன மழைத்துளி போல///
ReplyDeleteநன்றி துரை
நேற்று ஒரு பதிவரின் அவர் பற்றிய குறிப்பில் "செத்தால் அழ நாலு பேரை இனிச் சேர்க வேண்டிய தமிழன்" என இட்டிருந்தார்.
ReplyDeleteபடித்துச் சிரித்தேன்.
இதைப் படித்ததும் ;சிந்தித்தேன்.
உங்களுக்கு தமிழ் படிகிறது
யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே..நன்றி உங்கள் பகிர்விர்க்கு
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteஅதுவும் சிந்திக்க வைக்கும் வரிகள்
எதை விடுவது
எதை சொல்வது
என்று நான் அறியேன்
மொத்ததில் அத்தனையும்
முத்துகள்
வாழ்த்துகள் நண்பரே
நன்றி திகழ்மிளிர்
ReplyDeleteVery Nice.... Jeeva.
ReplyDelete