எப்போதும் போலவே
சந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப்போனதன்றும்
யன்னலுக்கு வெளியே
யுத்தத்தின் கோரம்
பேரூந்துள் நம்மிடையே
உணர்வுகளில் ஈரம்
சொல்ல நினைத்தவைகள்
இதயத்தின் ஏதாவோர் மூலையில்
எழமுடியாத ஆழத்தில்
எப்படியோ சிக்கிக்கொள்ள
பொறுக்கியெடுத்த சில
வார்த்தைகளே போதுமாய் இருந்தது
அப்போதுநாம் பேசிக்கொள்ள
பேசுபொருட்களெல்லாம்
பெறப்பட்டவைகளாக
நம்மைப் பொறுத்தமட்டில்
பெறுமதியற்றவைகளாக இருக்க
பேசவேண்டிய வார்த்தைகள்
காற்றாகி கடைசியில் {பெரு} மூச்சாகி
பேச்சின் இடையிடையே வந்து போனது.
இறுதிவரை நம்
இதயத்துண்ர்வுகள் பற்றி
எச்சரிக்கையாகவே இருந்தோம்
விடைபெறும் வரை
விதி நம் ‘நா’ விற்கு
விலங்கிட்டிருந்தது
இப்போது கிடைத்தாலும்
ஏறிப்பார்க்கிறேன்
அந்த வழிப் பேரூந்தில்
மணமுறிவு பெற்ற நம்மை
மூன்றுமணிநேரம் ஒருமித்து
உட்காரவைத்த கர்வத்தோடு
உருக்குலையாமல் இருக்கும் அதன்
இருக்கைகளை ஒருதரம்………….
சந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப்போனதன்றும்
யன்னலுக்கு வெளியே
யுத்தத்தின் கோரம்
பேரூந்துள் நம்மிடையே
உணர்வுகளில் ஈரம்
சொல்ல நினைத்தவைகள்
இதயத்தின் ஏதாவோர் மூலையில்
எழமுடியாத ஆழத்தில்
எப்படியோ சிக்கிக்கொள்ள
பொறுக்கியெடுத்த சில
வார்த்தைகளே போதுமாய் இருந்தது
அப்போதுநாம் பேசிக்கொள்ள
பேசுபொருட்களெல்லாம்
பெறப்பட்டவைகளாக
நம்மைப் பொறுத்தமட்டில்
பெறுமதியற்றவைகளாக இருக்க
பேசவேண்டிய வார்த்தைகள்
காற்றாகி கடைசியில் {பெரு} மூச்சாகி
பேச்சின் இடையிடையே வந்து போனது.
இறுதிவரை நம்
இதயத்துண்ர்வுகள் பற்றி
எச்சரிக்கையாகவே இருந்தோம்
விடைபெறும் வரை
விதி நம் ‘நா’ விற்கு
விலங்கிட்டிருந்தது
இப்போது கிடைத்தாலும்
ஏறிப்பார்க்கிறேன்
அந்த வழிப் பேரூந்தில்
மணமுறிவு பெற்ற நம்மை
மூன்றுமணிநேரம் ஒருமித்து
உட்காரவைத்த கர்வத்தோடு
உருக்குலையாமல் இருக்கும் அதன்
இருக்கைகளை ஒருதரம்………….
த.ஜீவராஜ்
/எப்போதும் போலவே
ReplyDeleteசந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப்போனதன்றும்/
அருமையான வரிகள்
//அருமையான வரிகள்//
ReplyDeleteநன்றி திகழ்மிளிர்
//சொல்ல நினைத்தவைகள்
ReplyDeleteஇதயத்தின் ஏதாவோர் மூலையில்
எழமுடியாத ஆழத்தில்
எப்படியோ சிக்கிக்கொள்ள
பொறுக்கியெடுத்த சில
வார்த்தைகளே போதுமாய் இருந்தது
அப்போதுநாம் பேசிக்கொள்ள//
அடிக்கடி இப்படி ஆவதுண்டு.
அன்புடன் அருணா
நன்றி அருணா
ReplyDeleteஅனுபவத் தெறிப்பில் கவிதைகள் சடாரென்று
ReplyDeleteதைத்துவிடும். வலிகள் நிரைந்த வரிகள் இன்னுமமதிக
வேகத்துடன். நல்ல கவிதை
நன்றி காமராஜ் அவர்களே
ReplyDeleteஉங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி தருகிறது...
//விடைபெறும் வரை
ReplyDeleteவிதி நம் ‘நா’ விற்கு
விலங்கிட்டிருந்தது
///
என்றுமே விதியை வெல்வது கடினம்தான் ஐயா
நன்றி SUREஷ் அவர்களே
ReplyDelete//இப்போது கிடைத்தாலும்
ReplyDeleteஏறிப்பார்க்கிறேன்
அந்த வழிப் பேரூந்தில்
மணமுறிவு பெற்ற நம்மை
மூன்றுமணிநேரம் ஒருமித்து
உட்காரவைத்த கர்வத்தோடு
உருக்குலையாமல் இருக்கும் அதன்
இருக்கைகளை ஒருதரம்...//
பிரிவின் துயர் வாட்டும் வரிகளாக மனதில் தைக்கின்றன.
//இப்போது கிடைத்தாலும்
ReplyDeleteஏறிப்பார்க்கிறேன்
அந்த வழிப் பேரூந்தில்
மணமுறிவு பெற்ற நம்மை
மூன்றுமணிநேரம் ஒருமித்து
உட்காரவைத்த கர்வத்தோடு
உருக்குலையாமல் இருக்கும் அதன்
இருக்கைகளை ஒருதரம்...//
பிரிவின் துயர் வாட்டும் வரிகளாக மனதில் தைக்கின்றன.
நன்றி மாதவராஜ் அவர்களே
ReplyDelete