Tuesday, December 02, 2008

இப்படியும் ஒரு வாழ்க்கை...

வாழ்க்கை
ஏக்கம்,துக்கம் ஏன் இந்த
வாழ்வென்ற விரக்தியோடு
விடிந்துகொள்கிறது பகல்


வீதி,வேலைத்தளங்கள்,
பாடசாலை,பயணத்திலெல்லாம் –விதி
எம்மீது ஒரு விழி வைத்திருக்கிறது

சந்தோசமான சடங்குகளில்கூட
எல்லோர் மனத்திலும் –தனித்துட்காந்திருக்கிறது
எதிர்காலம் பற்றிய பயம்

கண்ணயரும் போதெல்லாம்
துப்பாக்கிச் சத்தங்கள்
விழித்திருக்கிறது இரவு.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

12 comments:

  1. உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவத் தொழில் நேரத்துடன் போட்டி போட வேண்டியதுதான். ஆயினும் எழுதுவதில் சுகமும், சுயதிருப்தியும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றிகள்
    உங்கள் வாழ்த்துரை உற்சாகமூட்டுகின்றது.
    நீங்கள் எங்களுக்கு எழுத்துலகில் வழிகாட்டி

    ReplyDelete
  3. கவிதை நன்றாக உள்ளது.

    வாழ்த்துகள்..

    வினோத்
    இந்தியா

    ReplyDelete
  4. நன்றி வினோத்

    ReplyDelete
  5. kavithai superb.......

    ReplyDelete
  6. அருமையான கவிதை

    ReplyDelete
  7. கவிதை இனிமை நண்பரே ....

    கவலைகள் விரைவில் தீரும் ...

    வாழ்த்துக்களோடு ...

    விஷ்ணு

    ReplyDelete
  8. நன்றி விஷ்ணு
    உங்கள் வாக்குப்பலிக்கட்டும்....

    ReplyDelete
  9. உங்கள் ஏக்கத்தின் தாக்கத்தை என்னால்
    உணரமுடிகிறது.
    //கண்ணயரும் போதெல்லாம்
    துப்பாக்கிச் சத்தங்கள்
    விழித்திருக்கிறது இரவு.//
    உறவுகளும் இதையே சொல்கிறார்கள்,எழுதுகிறார்கள்.

    ReplyDelete
  10. நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே

    ReplyDelete