Tuesday, September 30, 2008

யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார் ?

மீளவும் ஆரம்பித்திருக்கிறது
அடிமுடி தேடும் படலம்
முன்னையவற்றை விடவும் சற்று மூற்கமாக

யுத்த காலம்
ஒண்டிரண்டாய் உயிர்போகும்
உடமைகரியாகும்
எண்ணிக்கைபற்றிய கவலையன்றி
வேறேதும் இருக்கப்போவதில்லை
இழந்தவன் தவிர்த்து மற்றவர்க்கு

சண்டைகள் நடக்கும்
சிலநூறுபேர் சாவார்
கர்த்தால் வரும்
கடையடைப்பு ,எரிப்பு
இடம்,புலம் பெயர்வுகள் நிகழும்
பட்டினி மரணங்கள்
பாவையர் கதறல்கள்
பாரினை உலுக்கும் - இருந்தும்
அரியணை தொடர்ந்திடவேண்டி
அரவமின்றி இருப்பர்
அதிகாரத்தில் இருப்போர்

சண்டைகளுக்ககும், சத்தங்களுக்கும் நடுவே
சமாதானத்துக்கான போர்
சல்லடைபோட்டுத் தேடும்
யுத்தத்தின் முடிவை
ஆட்சிக்கால எல்லைக்குள்
அடைந்துவிடவேண்டுமென்ற ஆவலோடு
இத்தனைக்கும் அப்பால்
உறங்கிக்கொண்டிருக்கிறது உண்மை

யுத்தத்தின் முடிவினைக் கண்டவர்கள்
இறந்தவர்கள் மட்டுமே …பிளேட்டோ..


த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. இனி யுத்தம் என்று நிற்குமோ
    அன்று தான்
    மனித‌ர்க‌ள்
    இப் பூமியில் வாழ்வ‌தாய்
    அர்த்த‌ம்.....

    அரவிந்தன்
    தஞ்சாவூர்., தமிழ் நாடு, இந்தியா

    ReplyDelete
  2. நன்றி அரவிந்தன்
    நல்லனவற்றுக்காய் பிராத்திப்போம்

    ReplyDelete
  3. ஜீவநதி அருமையாக இருக்கின்றது, பல விடயங்களைக் கூற முற்பட்டுள்ளீர்கள், முன்பும் இத் தளம் வந்துள்ளேன், ஆனால் பின்னூட்டம் இடவில்லை என்பது வருத்தம் தான்.

    ஜதார்த்தமாக கவிதை பின்னியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.
    //அரியணை தொடர்ந்திடவேண்டி
    அரவமின்றி இருப்பர்
    அதிகாரத்தில் இருப்போர்//

    யுத்தத்தை வேண்டுமென்றே
    எம்மீது சுமையேற்றி
    அதிலே குளிர் காய்ந்து
    அதிகார சிம்மாசனத்துக்காய்
    ஆயிரம் தலை கொய்து
    அதன்மீதேறி நின்று
    அர்த்தமற்று
    சந்தற்பவாத அரசியல் பேசி
    மேய்ப்பர்கள் தாமேயென்று
    இன்னும் தலையெடுக்க
    துணிந்து நிற்பவர்
    மனம் மாறும் வரை
    எம்மவருக்கு ஏது நிம்மதி!

    http://kalamm2.blogspot.com/ முடிந்தால் இச் சுட்டிக்குச் சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  4. நன்றி நண்பரே,
    தங்கள் வலைப்பூவில் இணைத்துக்கொண்டதற்கு.
    உங்களுடைய Blogன்Linkஐ என்னுடைய பதிவில் இணைத்து இருக்கிறேன்.உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  5. பல்லாயிரம் ஆண்டுகளாய்.............

    ReplyDelete
  6. உண்மைதான் SUREஷ் அவர்களே

    ReplyDelete