தெருத்தெருவாய் ஓடித்திரிந்தான்
தினந்தோறும் பாடிமகிழ்ந்தான்
கண்ணாடிமுன் காலங்கழித்தான்
கடிதங்கள் எழுதி ஓய்ந்தான்
பாடங்கள் படிக்க மறந்தான்
படுத்தாலும் தூக்கமிழந்தான்
நண்பர்களுக்கு அவன்தான் நாயகன்
நக்கலடிப்பதற்கென்றுமானான்
எடுக்காத போணில் எல்லாம்
ஏதேதோ பேசிமகிழ்ந்தான்
துடிக்கும் மனதை அடக்க
துணிவின்றித் தொலைந்து போனான்
எடுக்கின்ற சபதமெல்லாம்
அடுத்தநாளே மறந்து போனான்
இத்தனையும் ஏதுக்கடா?
என்றேசுவோரை அடக்கி
என்றாவதொருநாள் ஏற்றுக்கொள்வாள்
அவளெனச் சொல்லி நின்றான்.
தினந்தோறும் பாடிமகிழ்ந்தான்
கண்ணாடிமுன் காலங்கழித்தான்
கடிதங்கள் எழுதி ஓய்ந்தான்
பாடங்கள் படிக்க மறந்தான்
படுத்தாலும் தூக்கமிழந்தான்
நண்பர்களுக்கு அவன்தான் நாயகன்
நக்கலடிப்பதற்கென்றுமானான்
எடுக்காத போணில் எல்லாம்
ஏதேதோ பேசிமகிழ்ந்தான்
துடிக்கும் மனதை அடக்க
துணிவின்றித் தொலைந்து போனான்
எடுக்கின்ற சபதமெல்லாம்
அடுத்தநாளே மறந்து போனான்
இத்தனையும் ஏதுக்கடா?
என்றேசுவோரை அடக்கி
என்றாவதொருநாள் ஏற்றுக்கொள்வாள்
அவளெனச் சொல்லி நின்றான்.
த.ஜீவராஜ்
பக்திப் பாடல் போலவும் இருக்கிறது.
ReplyDeleteரஜினிக்கு [இன்னபிற நடிகர்களுக்கும்] அறிமுக பாடலாகவும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்
நன்றி SUREஷ்
ReplyDelete