அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்
இடுக்கண் தருபவன்
இறைவனல்ல –நம்
இதயத்துணர்வுகள்.
புரிந்துகொண்டால்
வெற்றியும்,தோல்வியும்
வேறொருவர் வசமில்லை
வீண்பழி சொல்ல
வந்து போவதற்கு
துன்பமும், இன்பமும்
தூரத்தில் இல்லை
நம்மோடுதான்
விழித்தால்தான்
உறக்கம் கலையும்
அடிபட்டல்தான்
அனுபவம் கிடைக்கும்-உன்னை
உணர்ந்தால்தான்
உலகம் புரியும்.
த.ஜீவராஜ்
அருமை
ReplyDeleteGOOOOOOOOD.
ReplyDeleteஅருமை ஜீவா.
ReplyDeleteமனதைக் கணிக்கும்
மானியொன்று
மானிடருக்கு கிடைத்து விட்டால்
மனிதம் தேடும்
உலகம் புரியும்!
மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteஇப்படைப்பை
எனது இணயத்தில்
இனைக்கலாமா நன்றியுடன்
//இடுக்கண் தருபவன்
ReplyDeleteஇறைவனல்ல –நம்
இதயத்துணர்வுகள்.// மிகச் சரி. இதைப் புரிந்து கொள்ளவும் நம் இதயத்துக்கு எல்லாம் வல்ல இறைவன் சக்தியைத் தருவாராக:)!. //புரிந்துகொண்டால்
வெற்றியும்,தோல்வியும்
வேறொருவர் வசமில்லை
வீண்பழி சொல்ல// மிக மிகச் சரி. தீதும் நன்றும் பிறர் தர வாரா. //விழித்தால்தான்
உறக்கம் கலையும்
அடிபட்டல்தான்
அனுபவம் கிடைக்கும்//அடித்துச் சொல்லியிருக்கிறீர்கள். அற்புதம்.வாழ்த்துக்கள்!------------------------------------------------ அன்புடன்ராமல்க்ஷ்மி
உண்மைதான் நன்றி ஈழவன்
ReplyDeleteநன்றி Anonymous
ReplyDeleteநன்றி naganathan
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பகிர்விர்க்கும்
தாராளமாக இணைக்கலாம்...
நன்றி ராமல்க்ஷ்மி அவர்களே
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை தருகிறது..