கண்களைமூடிக் கைகளைக்
கூப்பியிருந்தான் அவன்
இதயம் மட்டும் திறந்திருந்தது
எதிரே நிற்கும் எழிலின் இமைகள்
திறக்கும் எப்போதென்று
இதயம் மட்டும் திறந்திருந்தது
எதிரே நிற்கும் எழிலின் இமைகள்
திறக்கும் எப்போதென்று
தன்னைத் தியானிப்பவன் கொஞ்சம்
தவமும் செய்யட்டுமேயென்று
எல்லாம் தெரிந்தும்
இறுக்கி மூடியிருந்தாள்
இமைகளை அவள்
தவமும் செய்யட்டுமேயென்று
எல்லாம் தெரிந்தும்
இறுக்கி மூடியிருந்தாள்
இமைகளை அவள்
எதுவுமே தெரியாத
சிலையாக
இருவருக்கும் முன்னே நான்.
த.ஜீவராஜ்
இருவருக்கும் முன்னே நான்.
அன்பின் ஜீவா
ReplyDeleteகவிதை அருமை
நல்வாழ்த்துகள்
அன்பின் ஜீவா,
ReplyDeleteகாதலைப் பூஜிப்பவனை
கடவுள் கைவிடமாட்டான்
ஏனென்றால் அன்பின் முழுமையான் வடிவமே
காதல்.
அற்புதமாக கவிதை தந்துள்லீர்கள், அதுவும் கடவுள் தனது உணர்ச்சிகளைக்
கொட்டுவதாய்க் காட்டி.
பாராட்டுக்கள்
தன்னைத் தியானிப்பவன் கொஞ்சம்
ReplyDeleteதவமும் செய்யட்டுமேயென்று
எல்லாம் தெரிந்திருந்தும்
இறுக்கி மூடியிருந்தாள்
இமைகளை அவள்
அருமையான கவிதை
கவிதை மிக அருமை நண்பரே ...
ReplyDeleteகடவுள் கனியட்டும்
அந்த காதலர்களை
சேர்த்து வைக்கட்டும் ... தொடர்ந்து கவிதைகள் தர வாழ்த்தும் சொல்லி அன்புடன்
பாராட்டுக்கு நன்றி சினா அவர்களே
ReplyDelete//அற்புதமாக கவிதை தந்துள்லீர்கள், அதுவும் கடவுள் தனது உணர்ச்சிகளைக்
கொட்டுவதாய்க் காட்டி.
அன்புடன்
சக்தி //
சக்தி அவர்களே..... சிலநேரங்களில் தோன்றுவதுண்டு கடவுளை நாம்
சோதிக்கிறோமோ என்று......
//அருமையான கவிதை
பூங்குழலி //
நன்றி பூங்குழலி
//கடவுள் கனியட்டும்
அந்த காதலர்களை
சேர்த்து வைக்கட்டும் //
நன்றி விஷ்ணு { பாவம் கடவுள் }
அன்பின் தங்கராஜ்
ReplyDeleteஅருமையான கவிதை
மட்டுமில்லாமல்
அடுத்தவர்களுக்கும்
கவிதை எழுதிடத் தூண்டும்
ஆவலை...
உண்டாக்கிவிடுகின்றது
உங்களின் அழகிய
சிந்தனைகள்!
வாழ்த்துகள்
நன்றி தமிழன் உங்கள் வார்த்தை உற்சாகமூட்டுகிறது.
ReplyDeleteம்... பல நேரம் இப்படியாக சோதனையாகிவிடுகிறது.
ReplyDeleteநன்றி பாஸ்கர்
ReplyDelete{பல நேரம் இப்படியாக சோதனையாகிவிடுகிறது கடவுளுக்கு}
மிகவும் அருமை.அருமை தவிர வேறில்லை
ReplyDeleteநன்றி துரை ,உங்கள் பாராட்டு மேலும் எழுதும் உற்சாகத்தை தருகிறது.
ReplyDeleteநன்று ஜீவன்.. :)
ReplyDeleteகடவுள் சிலையின் நிலையை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்...
காதலில் எப்பொழுதுமே பெண்களை தேவதையாகவும் ஆண்களை பக்தர்களாகவும் பார்ப்பது
வழக்கம்தானே..
ஜீவா,
ReplyDeleteஇந்த கவிதை ரொம்ப வித்தியாசமா இருக்கு...காதலைப்பற்றிதான்
என்றாலும், காதலானாக இல்லாமல் கடவுளாக இருந்து
காதலை பார்பது அருமை...
காதல் வந்ததும், கடவுளையும் டீல்ல [deal] விட்டுடாங்களா??
:))))))))))
///காதலில் எப்பொழுதுமே பெண்களை தேவதையாகவும் ஆண்களை பக்தர்களாகவும் பார்ப்பது
ReplyDeleteவழக்கம்தானே.. ///
கோகுலன்.
நன்றி கோகுலன் சில வழக்கங்கள் வாழ்வினை சுவாரிசம் ஆக்குகின்றன.
///காதலைப்பற்றிதான்
என்றாலும், காதலானாக இல்லாமல் கடவுளாக இருந்து
காதலை பார்பது அருமை... ///
நன்றி வாணி, கடவுளுக்கு நாம் கொடுக்கும் கஸ்டங்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டுமல்லவா?
அன்புடன் ஜீவன்.
எப்போதுமே கண்மூடி இருப்பவர்தான் கடவுள்.
ReplyDeleteஅது காதல் என்றாலும்,
கருவாடு என்றாலும்.....
அழகான கவிதை
நன்றி SUREஷ் அவர்களே
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு...
ஜீவன்!!
ReplyDeleteநல்ல கவிதை!!
தேவா...
நன்றி தேவா... அவர்களே
ReplyDeleteசும்ம பின்னிட்டிங்க் நண்பா கவிதையில்
ReplyDeleteபாவம் கடவுள்! அதுவும் பிள்ளையார். அவர் பாடு திண்டாட்டம் தான்.
ReplyDelete