Monday, October 06, 2008

வாங்க பகிரலாம்

மருத்துவம்
வணக்கம்,
நலமா ?
தலைப்பில் சொன்னது போல் இது பகிரலுக்கான தளம். எனவே கேள்விகளோடு ஆரம்பிக்கிறேன்.

{ கேட்பதுதானே இலகு }
* உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் தற்போதய உடல்நிறை, உயரம் தெரியும் ?
{ 50 kg க்கு அரைக் kg தான் குறைவென்று குத்துமதிப்பாய்ச் சொல்லப்படாது }
* ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள் ? அல்லது ஒரு கிழமைக்கு நான்கு நாளேனும் உடற்பயிற்சி செய்கிறீர்களா ?
{ கேட்கவே மூச்சிரைக்கிறதா ? }
* உங்கள் உணவில் காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறீர்களா ? ஒவ்வொரு நாளும் உணவின்பின் ஒருபழமேனும் உண்ணக் கிடைக்கிறதா ?
{ காய்கறி விலையாவது தெரியுமா ? }
* நீங்கள் 35 வயதைத் தாண்டியவரா ? அப்படியாயின் ஒருமுறையேனும் இரத்தத்தில் குளுக்கோசு , கொழுப்பின் அளவை பரிசோதித்ததுண்டா ? இறுதியாக எப்போது இரத்தழுத்தம் சோதித்தீர்கள் ?* நீங்கள் சிறந்த புகைபிடிப்பாளரா ? அப்படியாயின் இந்த வருடத்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த எப்போதாவது முயற்சித்ததுண்டா ?
* மது உங்களுக்கு அடிமையா ? அல்லது மறுதலையா ?* உங்கள் பரம்பரைக்கு உள்ள நோய்பற்றி ஏதேனும் அறிந்து வைத்திருக்கிறீர்களா ?
இத்தனை கேள்விகளக்குப் பின்னால் அப்படி என்ன பெரிய பிரச்சனை இருக்கப்போகிறது என்றுதானே யோசிக்கிறீர்கள். உலக சகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையைப் பாருங்கள்.

Noncommunicable diseases now biggest killerssays 
WHO's World health statistics 2008
19 MAY 2008 GENEVA -- The global burden of disease is shifting from infectious diseases to noncommunicable diseases.

The shifting health trends indicate that leading infectious diseases – diarrhoea, HIV, tuberculosis, neonatal infections and malaria – will become less important causes of death globally over the next 20 years.

அதாவது வரப்போகும் இருபது ஆண்டுகாலப் பகுதியில் தொற்றும் தன்மையற்ற நோய்கள்தான் உலகில் உயிர்கொல்லி நோய்களாக உருவெடுக்கப்போகிறது என்று எதிர்வு கூறுகிறது இந்த அறிக்கை.

தொற்றுநோய்கள் பற்றி பரபரப்பான செய்திகளை வாசித்து விழிபிதுங்கி இருக்கும் நமக்கு இந்த அறிக்கை இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


தொற்றும் தன்மையற்ற நோய்கள்
{ Noncommunicable diseases }

இந்நோயானது தொற்றுநோய்க் கிருமிகளால் ஏற்படாது பரம்பரை மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக உருவாகும் நோய்களாக கருதப்படுகிறது. அவற்றில் சில
Ø இருதயம் சம்மந்தப்பட்ட நோய்கள்
Ø நீரழிவு நோய்
Ø உயர் குருதிஅமுக்கம்
Ø நாட்பட்ட நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள்
Ø புற்று நோய்
Ø பக்க வாதம்



நாம்தான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறோமே நமக்கெல்லாம் இந்நோய்கள் எங்கே வரப்போகிறது என்று அடம்பிடக்காமல் வாருங்கள் ஆபத்துவிளைவிக்கும் காரணிகள் என்னென்னவென்று ஆராய்வோம்.
Ø உயர்இரத்த ஆழுத்தம்
Ø குறைந்த உடற் பயிற்சி
Ø இரத்தத்தில் அதிகளவான குளிக்கோசு
Ø உடலில் மிகுதியான கொழுப்புச்சத்து
Ø மிகுதியான உடல் பருமன்
Ø புகைபிடித்தல்
Ø மதுப்பாவனை
Ø குறைந்தளவில் காய்கறி, பழவகைகளை உணவில் சேர்த்தல்
Ø அடிக்கடி மன அழுத்தத்திற்கு உள்ளாதல்


மனதைத்தொட்டுச் சொல்லுங்கள் குறைந்தது மூன்று ஆபத்துவிளைவிக்கும் காரணிகளாவது உங்களுக்கும் இருக்கும். பயம் காட்டவில்லை இது நம் வாழ்க்கை நாம்தானே தீர்மானிக்கவேண்டும்.
நம்மையறியாமலே நமது வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கங்கள், பரம்பரைக்காரணிகள் என்பன வருங்காலத்தில் உலகின் உயிர்கொல்லி நோய்களாக உருவெடுக்கப்போகும் தொற்றும் தன்மையற்ற நோய்கள் முன்னால் நம்மைக் கொண்டுபோய் நிறுத்தப்போகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

இப்படித்தான் வாழவேண்டும் என்று வற்புறுத்தவில்லை , இப்படி வாழ்ந்தால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நலமோடு வாழலாம் என சொல்ல விழைவதே இத்தொடர் பதிவுகளின் நோக்கம்.
எனவே வரும் பதிவுகளில் மேற்கூறிய ஆபத்துவிளைவிக்கும் காரணிகளில் இருந்து நம்மை விடுவிக்கும் வழிமுறைகள் பற்றி விரிவாக ஆராய்வோம்.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

8 comments:

  1. ஆஹா..

    இப்பவே வயுத்துல பட்டாம் பூச்சி பறக்குதே..

    எதுக்கு இப்படி புளிய கரைக்குறீங்க??

    ReplyDelete
  2. வாங்க அணிமா
    இப்படி பயப்பட்டா எப்படி
    இது நம் வாழ்க்கை நாம்தானே தீர்மானிக்கவேண்டும்.
    நம்மை நாமறிவோம்.

    ReplyDelete
  3. நீங்க சொல்றது உண்மை தான்..
    அதுக்காக இப்படி எல்லாம் பயமுறுத்தாதீங்க..
    நாங்க ஏதோ தம் அடிச்சி பொழுத போக்கிகிட்டு இருக்கோம்.. அதுக்கும் வேட்டா??

    ReplyDelete
  4. அணிமா....அணிமா....
    அதுதான் புத்தியா முதலே சொல்லிட்டம்மல

    ///இப்படித்தான் வாழவேண்டும் என்று வற்புறுத்தவில்லை , இப்படி வாழ்ந்தால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நலமோடு வாழலாம் ///
    உங்க வாழ்க்கை உங்க கையில்....

    ReplyDelete
  5. அன்பின் ஜீவா
    அருமையான பயனுள்ள பதிவு
    அடிக்கடி நாம் நமக்கே கேட்க வேண்டிய கேள்விகள் தான்
    நம் உடல் நலம் பேணும் நல்ல பழக்கத்தை ஆரம்பிக்கலாமே
    செய்வோம்
    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. /// இப்படித்தான் வாழவேண்டும் என்று வற்புறுத்தவில்லை , இப்படி வாழ்ந்தால்
    நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நலமோடு வாழலாம் என சொல்ல விழைவதே
    இத்தொடர் பதிவுகளின் நோக்கம்.
    எனவே வரும் பதிவுகளில் மேற்கூறிய ஆபத்துவிளைவிக்கும் காரணிகளில் இருந்து
    நம்மை விடுவிக்கும் வழிமுறைகள் பற்றி விரிவாக ஆராய்வோம்.//


    நல்ல பயன்தரும் பதிவு ...
    தொடருங்கள் நண்பரே ...
    தொடர்ந்து வர காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
  7. வாருங்கள் சீனா ,விஷ்ணு
    மன்னிக்கணும் தொடர் கொஞ்சம் மெதுவாக நகரும்.

    ReplyDelete
  8. கட்டுரையை ஆரம்பித்திருக்கும் விதம்... ரசித்தேன். :)

    சிந்திக்க வைக்கும் இடுகை. தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete