தன் வாழ்நாளின்
சந்தோச தரணங்களை
சிலிர்ப்போடு அசைபோடுவார்
அப்பப்பா – அது
அவராயுளின் அரைப்பகுதி
பாடசாலைக் காலம்வரை
பட்டாம்பூச்சி வாழ்க்கையென்று
மகிழ்வார் அப்பா
தவழ்ந்தது முதல்
வேட்டோசை கேட்டு
வளர்ந்தேன் நான்
தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை
நாளை
எனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….
சந்தோச தரணங்களை
சிலிர்ப்போடு அசைபோடுவார்
அப்பப்பா – அது
அவராயுளின் அரைப்பகுதி
பாடசாலைக் காலம்வரை
பட்டாம்பூச்சி வாழ்க்கையென்று
மகிழ்வார் அப்பா
தவழ்ந்தது முதல்
வேட்டோசை கேட்டு
வளர்ந்தேன் நான்
தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை
நாளை
எனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….
த.ஜீவராஜ்
வாசித்த பின்னர்.எதை எழுதுவதென்றே தெரியவில்லை.
ReplyDeleteநன்றி தூயா..
ReplyDeleteவருகைக்கும், பகிர்விற்கும்
வாசித்த்து முடிக்கும் போது மனது கனக்கிறது.எங்களது இந்த துன்பம் எங்களுடனேயே முடிய வேண்டும்.
ReplyDeleteமிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் சொல்லோவியம் வாழ்த்துகள் ஜீவா.
நன்றி வதீஸ்வருணன்
ReplyDeleteபகிர்கையில் குறைகிறது துன்பம்.
கவிதை நன்றாக உள்ளது
ReplyDeleteநாளை
புதிய
உலகம்
மலர் கொண்டு
உங்கள மகனை
வரவேற்கும்
நேற்று... இன்று... நாளை அற்புதம்.
ReplyDeleteசெல்லடியின் அர்த்தமென்னவோ?
> இடம்பெயர்ந்தாள்
> அன்னை
இரத்த மை என்று பிரித்து எழுதலாமென நினைக்கிறேன். மை விகுதி பெரும் சொல்
இரத்தம் அல்ல.
கவலை வேண்டாம் தொழரே...
ReplyDeleteஇரவு என்று ஒன்றிருந்தால் விடியல் ஒன்று நிச்சயம் இருக்கும்..
--
நல்ல கவிதை ..அன்பின் தங்க ராசா
ReplyDeleteகண்டிப்பாக அன்பின் மதுமிதா அவர்களின் சொன்னது போலவே நடக்கும் ..
தங்கராஜா
ReplyDeleteதினம் இரண்டு முறையேனும்
அழுதிடுவேன்
என் குடும்பத்தினருடன்
பேசுகையில்!
உன் குடும்பத்தினருடன்
பேசுகையில்!
ஆமாம் ஒவ்வொரு முறை
உன் கவிதை படிக்கையில்
தெரிவது நம் குடும்பமே!
அழுகையை அணை போட்டு
நிறுத்துவதும் உன் கவிதையே
அடுத்த அழுகைக்காக!
உன்னோடு ஒருவனாக
அழுபவன் - தமிழன்!
//நாளை
ReplyDeleteபுதிய
உலகம்
மலர் கொண்டு
உங்கள மகனை
வரவேற்கும்//
.மதுமிதா
///கண்டிப்பாக அன்பின் மதுமிதா அவர்களின் சொன்னது போலவே நடக்கும் ..
அன்புடன்
விஷ்ணு //
நன்றி மதுமிதா, விஷ்ணு உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
//இரவு என்று ஒன்றிருந்தால் விடியல் ஒன்று நிச்சயம் இருக்கும்.. //
ReplyDeleteநன்றி சிவா நம்பிக்கொண்டிருக்கிறோம்..........
நாளை
ReplyDeleteஎனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்தமை கொண்டு……….
இங்கு நாம் நமது அடுத்த சந்ததியினருக்கு சுகங்களை சேமித்துக் கொண்டிருக்கையில் ...
//இரவு என்று ஒன்றிருந்தால் விடியல் ஒன்று நிச்சயம் இருக்கும்.. //
> நன்றி சிவா நம்பிக்கொண்டிருக்கிறோம்..........
சிவா சொன்னதை நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்
பூங்குழலி
//இரத்த மை என்று பிரித்து எழுதலாமென நினைக்கிறேன்.//
ReplyDelete///நேற்று... இன்று... நாளை அற்புதம்.///
பாஸ்கர் (எ) ஒளியவன்
நன்றி பாஸ்கர், இரத்த மை என்பதுதான் சரி சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...
///செல்லடியின் அர்த்தமென்னவோ? ///
ஒருவகை கனரக ஆயுதம், அதிலிருந்து ஏவப்படும் எறிகணைகள் தான்மோதும்
பிரதேசத்தில் பெரும் சேதத்தை உண்டாக்க வல்லது.
///சிவா சொன்னதை நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்
பூங்குழலி ///
நன்றி பூங்குழலி உங்கள் வேண்டுதல் பலிக்கட்டும்.
கண்ணீர் விடக்கூட
ReplyDeleteகாத்திருக்கிறேன்... - வடக்கு
கட்டளை இட....
உனக்கும் எனக்கும்
வேறுபாடில்லை....
நீயாவது களத்தில்
கண்ணீர் விட உரிமை உள்ளவன்....
நான் அதுக்கூட அற்றவன்....
தமிழனாய் பிறந்துவிட்டேன்.....
தன் மானம் இழந்து விட்டேன்.....
இன்று உனக்கு....
நாளை எனக்கு.....
நன்றி Tamilmani
ReplyDeleteஉணர்விர்க்கும், பகிர்விற்கும்
kalam bathi sollum
ReplyDeleteNandri thamil mani ungal karuthea yen karuthum....
ஜீவராஜ், இதைப் பாராட்ட எனக்கு முடியவில்லை. தர்ம சங்கடத்தில் என்னை ஆழ்த்திவிட்டீர்கள். என்னுடைய ஆபத்தான கொடிய நிலையை தெளிவாக எடுத்தியம்பும் இந்தக் கவிதை என்னைச் செயல்படத்தூண்டுகிறது. ஆனால், தமிழ்மணி சொன்னது போல், அழக்கூட வடக்குக்கு காத்திருக்க வேண்டியச் சூழ் நிலை இந்தக் கேடுகெட்டத் தமிழனுக்கு.
ReplyDeleteநன்றி A.Arasu
ReplyDeleteகாத்திருக்கிறோம்
நன்றி Morthekai
உங்கள் அன்பு ஆறுதல் தருகிறது.
nandru.. valimikka kavithai...
ReplyDeletearumai jeevaraj... aazhntha varigal..
ReplyDeleteஅருமையான "பா" நண்பர் ஜீவராஜ் .
ReplyDeleteநண்பர்களுக்கு அழுவதற்க்கு எந்த விளக்கெண்ணையின் அனுமதியும் நமக்கு வேண்டாம் . ஆதரிப்பதற்க்கு மட்டுமே அனுமதி வேண்டும் . அதிலும் குறிப்பாக ஈழமக்களை ஆதரிப்பதை எந்த விளக்கெணணை சட்டமும் தடுக்கவில்லை .
ஆதலால் நமது அன்புத்தமிழர்களுக்காக அழுங்கள் உங்கள் ஆதரவைக் கொடுங்கள்.
நன்றி முடிவிலி
ReplyDeletevalimikka kavithai... வாழ்க்கையும்
நன்றி சசிதரன்
//நமது அன்புத்தமிழர்களுக்காக உங்கள் ஆதரவைக் கொடுங்கள்.//
நன்றி வெங்கடேசன்
nice
ReplyDeleteஉலகம் கடைசி வரை சும்மா இருக்காது என்று நம்புவோம் ஒரு நாள் உங்கள் துயர் தீரும்.
ReplyDeleteநன்றி Anonymous
ReplyDeleteநன்றி குடுகுடுப்பை உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு
//நாளை
ReplyDeleteஎனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….//
நல்ல கவிதை வலிக்கிறது நணபரே..
நல்ல காலம் விரைவில் வரும் நம்புவோம்..
///நல்ல காலம் விரைவில் வரும் நம்புவோம்..//
ReplyDeleteநன்றி கோகுலன்
nambikkaiyai ilakka vaendaam...'
ReplyDeletevidiyal vegu dhooram illai..
நண்பரே
ReplyDeleteஉங்களை ஒரு தொடர் பதிவிற்குஅழைத்திருக்கிறேன் மறக்காமல்.கலந்து கொள்ள
அன்புடன்வேண்டுகிறேன் ...
விபரங்களுக்கு
எனது வலைத்தளம் பாருங்கள்
இந்த அன்பு கட்டளையை தட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்
உங்களின்
இனிய தோழன்
விஷ்ணு
அழைத்ததற்கு நன்றிகள்
ReplyDeleteமுயற்சிக்கிறேன்...
அன்புடன் ஜீவன்
இரத்த மை கொண்டு………
ReplyDeleteஎழுத துடித்தாலு ம்
எழுதுவதற்க ு...
உதிரத்தால் நனையாத
நாட்குறிப் பேடும்...
எழுதியதை
படிப்பதற்க ு விழிகளும்...
மிஞ்சுமோ?!
என்ற அச்சம் உயிரை
ஊசலாடச்செய ்கிறது...
படைத்தவனை நாளும்
கெஞ்சுகிறத ு இம்மனது
இந்த மண்ணிற்கும ்
அமைதியை கொடு என்று...
///படைத்தவனை நாளும்
ReplyDeleteகெஞ்சுகிறத ு இம்மனது
இந்த மண்ணிற்கும ்
அமைதியை கொடு என்று...///
நன்றி கருவெளி ரா
very nice
ReplyDeleteநாளை என்ற வினா எதற்கு
ReplyDeleteஇன்றே எனவியம்பும் தோளிருக்க?!
நம்பிக்கைதான் வாழ்க்கை!
நன்றி Tamilamutham
ReplyDeleteஇதுவும் கடந்து போகும். போன பின்பே தெரியும் யாதுளது என்று. நல்லதே
ReplyDeleteநடக்குமென்று எண்ணிக் கொள்வோம். :-)
நன்றி பாஸ்கர்
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeleteநன்றி Anonymous
ReplyDelete//நாளை
ReplyDeleteஎனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….//
தொடர்கதையாகிப் போன எம்மவர்களின் வாழ்க்கையைச் செதுக்கிய காத்திரமான வரிகள்.
பாராட்டுக்கள் ஜீவன்.
நன்றி ஈழவன்
ReplyDelete//
ReplyDeleteதவழ்ந்தது முதல்
வேட்டோசை கேட்டு
வளர்ந்தேன் நான்//
வேதனை.
//தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை//
சோதனை.
//நாளை
எனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….//
வேண்டாம் வேண்டாம் அந்த தலைமுறையாவது விடியலைக் காணட்டும். தவழுகையில் இனிய குழலோசை கேட்கட்டும். நம்புவோம். நல்லது நடக்கும்.
////அந்த தலைமுறையாவது விடியலைக் காணட்டும். தவழுகையில் இனிய குழலோசை கேட்கட்டும். நம்புவோம். நல்லது நடக்கும்.///
ReplyDeleteநன்றி உங்கள் வாக்கு பலிக்கட்டும்....ராமலக்ஷ்மி அவர்களே
ஒவ்வொரு பருவத்திலும் மாற்றம் ஏற்படாதா என்று துடிக்கவைக்கும் கவிதை.
ReplyDelete///தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை///
அருமை..... அழத்தான் தோன்றுகிறது...ஒவ்வொரு பருவத்திலும் மாற்றம் ஏற்படாதா என்று துடிக்கவைக்கும் கவிதை.
///தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை///
அருமை..... அழத்தான் தோன்றுகிறது...ஒவ்வொரு பருவத்திலும் மாற்றம் ஏற்படாதா என்று துடிக்கவைக்கும் கவிதை.
///தம்பி வயிற்றில் இருக்கையில்
செல்லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள்
அன்னை///
அருமை..... அழத்தான் தோன்றுகிறது...
நன்றி ஆதவா
ReplyDelete"நாளை
ReplyDeleteஎனது பிள்ளையின்
நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு………."
கண்ணிலிருந்து குருதி கசிய வைக்கும் யதார்த்த வரிகள்
நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே
ReplyDelete