புன்னகைக்கும் போதெல்லாம் –என்னுள்
புதுரெத்தம் பாய்கிறது
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?
தினமும் எழுந்து
சிந்திக்கிறேன் பெண்ணே –உன்
சிரிப்புக்குவமைகளை
கடைசியில் என்னையே நான்
நிந்தித்துக்கொள்கிறேன்
வராத வார்த்தைகளுக்காய்
நிட்சயமாய்ச் சொல்வேன்
நீதானெனக்குச்
சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் –என்
வாழ்வின் மனஇறுக்கங்களால்
தோன்றிய வேதனைகளுக்கு நீ
மரண தேவதை
அதுவோர் காலங் கண்ணே
எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான்மட்டும்
இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
புன்னகைப் பொற்கரங்கள்
என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை
நினைத்துப் பார்க்கிறேன்-நாம்
பேசிக்கொண்டதைவிட
பிரியமாகச் சிரித்துக்கொண்ட
பொழுதுகள் ஏராளம் ஒருவேளை
முறைத்துக் கொண்டால்கூட
அதுயார் முதலில்
சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
இருந்திருக்கும்.
விலகிப் போனபின்னும்
நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில்
என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே
சிரித்துக் கொள்வதற்காய்.
த.ஜீவராஜ்
சிரிப்பின் செல்லக் குழந்தையான எனக்கு உங்கள் சிரிப்புக் கவிதை மிகவும்
ReplyDeleteபிடித்திருக்கிறது ஜீவன்!
நன்றி!
---------------------------------------------------------------------------------------------------
இதோ என் கிறுக்கல் ஒன்றை நீங்கள் ரசிக்கலாமே?
சிரித்துப் பார்த்தேன்
கண்ணாடிமுன் நின்று,
என்னைப் பிடித்தது எனக்கு!
நீ சிரிப்பதைப் பார்த்தபோது
உன்னைப் பிடித்தது எனக்கு!
இப்போது....
என்னை வெறுத்து,
உன்னையே நினைக்கும்போது
உருவாகும் சிரிப்பில்
உலகையே மறக்கிறேன்!
நினைத்து சிரிக்கும்பொருட்டு தவறேயில்லை, நினைத்து அழும் பொருட்டு
ReplyDeleteநினைக்காமலிருப்பதே மேல்.
விலகிப் போனபின்னும்
ReplyDeleteநீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில்
என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே
சிரித்துக் கொள்வதற்காய்.
அட அட.. இப்போ நான் அப்படித்தான் சிரிக்கிறேன்
காரணமே இல்லாமல் கூட ஒருவரை ஒருவர் பார்த்துச் சிந்திவிட்டுப் போகும்
ReplyDeleteசிரிப்புக்குத்தான் எத்தனை பரிதவிப்புகள்?
அதுவோர் காலங் கண்ணே
ReplyDeleteஎல்லோருக்கும் விடிந்திருக்கும் நான்மட்டும்
இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
புன்னகைப் பொற்கரங்கள்
என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை
ஒருவேளை
முறைத்துக் கொண்டால்கூட
அதுயார் முதலில்
சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
இருந்திருக்கும்.
நான் மிகவும் ரசித்த வரிகள் .
உண்மையைச் சொல்
ReplyDelete> செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
> சிரிப்பதற்கா? அல்லதெனைச்
> சிலிர்ப்பூட்டுவதற்கா?
யதார்த்தமான, மென்மையான கவிதை. வாழ்த்துகள் தங்க ராசா.
விலகிப் போனபின்னும்
ReplyDeleteநீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில்
என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே
சிரித்துக் கொள்வதற்காய். //
எனக்கு இந்த வரிகள் ரொம்ப புடிச்சுருக்குங்க.....
விலகிப்போனதும்...மனச ரணப்படுத்திக்கிட்டு இருக்கவங்க மத்தியில
என்னைக்காவது நினைச்சு சிரிச்சுக்குவேன்னு சொல்லுறது
ஒரு பாஸிடிவான விஷயம்...
வாழ்த்துகள் ஜீவன்.....
விலகிப் போனபின்னும்
ReplyDeleteநீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில்
என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே
சிரித்துக் கொள்வதற்காய். //
எனக்கு இந்த வரிகள் ரொம்ப புடிச்சுருக்குங்க.....
விலகிப்போனதும்...மனச ரணப்படுத்திக்கிட்டு இருக்கவங்க மத்தியில
என்னைக்காவது நினைச்சு சிரிச்சுக்குவேன்னு சொல்லுறது
ஒரு பாஸிடிவான விஷயம்...
வாழ்த்துகள் ஜீவன்.....
நன்றி கிரிஜா மணாளன்,
ReplyDeleteஉங்கள் உலகை மறக்கும் சிரிப்பினை கவிதையில் மட்டுமல்லாமல்
வலைத்தளத்திலும் பார்த்தேன்.
உங்கள் வலைத்தளம் காலத்தின் கட்டாயம். நம்மில் பெருப்பாலானோர் சிரிப்பதை
ஒரு வேலையாகவே நினைக்கிறார்கள்.
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?
என்று ஒரு வேகத்தில் எழுதினேன். இருந்தும் அது உண்மை.
வேர்த்துவிறுவிறுத்து படபடப்போடு அலுவலகம் விரைகையில் மெல்லிய
பன்முறுவலோடு எதிர்ப்படும் முகம் சட்டென நம்மில் ஒரு சிலிர்ப்பை
உருவாக்கிச் செல்வதை உணர்ந்திருப்பீர்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி பாஸ்கர் {?அனுபவம்}
கவனம் சிவா அக்கம் பக்கம் பார்த்து அளவோடு சிரிங்கள்.
புன்னகையின் ஒரு துளி இது ராஜா {?எந்த ஊருக்கு}
நன்றி பூங்குழலி {நிறைய முறைத்துக்கொள்வீர்களோ?}
நன்றி கோகுல் {சிலிர்ப்பூட்டியதா?}
நன்றி நட்சத்திரா {விதிவிலக்கான ?நட்சத்திரம், எல்லா நேரமும்
தெரிகிறதே?}
அன்புடன் ஜீவன்.
அன்பின் ஜீவன்,
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.
>> விலகிப் போனபின்னும்
நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில்
என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே
சிரித்துக் கொள்வதற்காய் >>
பாராட்டுக்கள்
நல்ல ஒரு கவிதை படித்த மகிழ்ச்சி மனதில்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே ...
நன்றி இனிய தோழன் விஷ்ணு ...
ReplyDeleteஉங்கள் வாழ்த்துரை உற்சாகமூட்டுகிறது.
பாராட்டுக்களுக்கு நன்றி சக்தி
அன்புடன்
ஜீவன்
:)))
ReplyDelete> அதுவோர் காலங் கண்ணே
> எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான்மட்டும்
> இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
> புன்னகைப் பொற்கரங்கள்
> என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை
நன்று..
நல்ல "பா" நண்பர் ஜீவராஜ் . வாழ்த்துகள்
ReplyDeletenice
ReplyDeleteசிரித்தாள்
ReplyDeleteசிரித்தேன்
நான் மட்டும்
சிரிப்போடு!!!
நல்ல கற்பனை பாரட்டுக்கள்
நன்றி வெங்கடேசன் வாழ்த்துக்கு..
ReplyDeleteநன்றி JB ,KAMAL
ReplyDeleteஞாபகங்களின் மீட்டல்தான்
ReplyDeleteஇறக்கும் வரை இளைஞனாய்
இருக்கும் வழி கி.ம
நன்றி கோகுலன். { அதுவோர் காலம் }
நன்றி nivedhida devi
அன்புடன் ஜீவன்
nice kavithai
ReplyDelete//விலகிப் போனபின்னும்
ReplyDeleteநீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில்
என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே
சிரித்துக் கொள்வதற்காய்//
ரொம்ப அழகான வரிகள்.
அன்புடன் அருணா
நன்றி அருணா அவர்களே
ReplyDeleteஉண்மைதான் அண்ணன் இயல்பாய் அவளுகள் சிரிக்கிறதைப்பாக்கிறதே ஒரு சுகம்தான்...:)
ReplyDeleteபிரிவுகளின் பின்னரும் நல்ல நினைவுகளை தருவது பெண்களிடமே வாய்க்கிறதோ....
ReplyDeleteநன்றி தமிழன்-கறுப்பி...
ReplyDeleteஉங்களுக்குத் தெரியாததா?
ReplyDeleteநன்றி தமிழன்-கறுப்பி...