நிலவெறிக்கும் நாளில் வரும் –உன்
நினைவு பிடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும்
கொலுசு பிடிக்கும்
கொலுசுகளைக் கூட்டிவரும்
பாதங்கள் நடந்துபோன
பாதைபிடிக்கும்- நீ
கடந்துபோன பின்னும் என்
சிந்தைவிட்டகலா உன்
சிரித்த முகம் பிடிக்கும்
காற்றுக் கலைத்துவிளையாடும்
காதோரக் கூந்தல் பிடிக்கும்
கதைகள் சொல்லி இடையில்
‘கடி’க்கையில் சிவக்கும்
கன்னம் பிடிக்கும்
கவிதைசொன்ன வேளைகளில்-நீ
கண்ணிமைக்காதிருந்த
கணங்கள் பிடிக்கும்
திடீரெனக் கண்டதில்
சிந்தை தடுமாறிப்பின் நீ
சிரிக்க முன்சிரித்த
வளையல் பிடிக்கும்
கைகள் பேசிய
மொழி பிடிக்கும்
கண்கள் சொல்லிய
கவி பிடிக்கும்
தென்றல் திருடிவரும் உன்
மணம் பிடிக்கும்
திருமணம் முடித்திடுவென்று என்
மனம் துடிக்கும்.
த.ஜீவராஜ்
தங்கராசா எனக்கு உந்தன் கவிதை பிடிக்கும்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றாக இருக்கிறது
ReplyDeleteதிடீரெனக் கண்டதில்
ReplyDeleteசிந்தை தடுமாறிப்பின் நீ
சிரிக்க முன்சிரித்த
வளையல் பிடிக்கும்
காதலில் தோய்ந்த கவிதை .
என்றென்றும் அழியா ஜீவனுள்ள காதலை
ReplyDeleteகவிதையாக்கி அன்புடனுக்கு தந்த
ஜீவராஜுக்கு வாழ்த்துகள்....
அன்புடன்
கவிதை அருமை ... தங்க ராசா ஜீவராஜ் ..அவர்களே ...
ReplyDeleteவாழ்த்துக்களுடன்
அன்பின் தங்கராசு,
ReplyDeleteஅருமையான கவிதை
அற்புதமான வரிகள்
இந்தக் கவிதை ஊறிய
இதயத்திலிருந்து வரட்டும்
இன்னும் பல கவிதைகள்
அன்பான வாழ்த்துக்கள்
அன்பின் தங்கராசா
ReplyDeleteவரிகளின் வசீகரத்தில்
வசமிழந்துவிட்டேன்!
வாடி வதங்கிப் போன
எனக்குள் தங்களின்
வரிகள் வருடிவிட்டது
என் இதயத்தை துளைத்து!
வாழ்த்துக்கள் தங்கராசா
உங்க கவிதை எனக்கும் பிடிச்சிருக்கு...
ReplyDelete///தென்றல் திருடிவரும் உன்
மணம் பிடிக்கும்
திருமணம் முடித்திடுவென்று என்
மனம் துடிக்கும்.////
அப்போ சீக்கிரம் பொண்ணு கேக்க வேண்டியதுதானே??..ஏதாவது உதவி
வேணும்னா சொல்லுங்க...நாங்கெல்லாம் இருக்கோம்...:)
அன்பின் தங்கராசா
ReplyDelete> வரிகளின் வசீகரத்தில்
> வசமிழந்துவிட்டேன்!
வழிமொழிகிறேன்! :-)
கவிதை அருமை!
அன்புள்ள ஜீவன் - நீ
ReplyDeleteஅன்புடனின் ஜீவனாக
ஏழைகளின் சேவகனாக
பல்லாண்டு வாழ
என் இனிய பிரார்த்தனைகள்
Sethukkarasi . என் சுரேஷ் க்கு என் நன்றிகள்.மற்றும்
ReplyDeleteபூங்குழலி ,நட்சத்திரா... , Kanthi Jaganathan ,விஷ்ணு ,சக்தி
தமிழன், அமீரகம் ,வாணி {அப்படியும் கூப்பிடலாம்}, TAMIZAN
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
// கவிதைசொன்ன வேளைகளில்-நீ
ReplyDeleteகண்ணிமைக்காதிருந்த
கணங்கள் பிடிக்கும்
திடீரெனக் கண்டதில்
சிந்தை தடுமாறிப்பின் நீ
சிரிக்க முன்சிரித்த
வளையல் பிடிக்கும் //
மிக அருமை ஜீவா..
கண் முன்னே ஒரு காட்சி கொண்டு வந்தீர்கள்.. ஹ்ம்ம்ம்..
ஜீவனின் வரிகளில் என் ஜீவனும் துடிக்கின்றது
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாருங்கள் வளமான வார்த்தைகளை
வார்த்து வாய் விட்டு சிரிக்க வைப்போம்
சில நொடிகள் சிந்திக்கவும் வைப்போம்!
நன்றி காதலுடன் ராஜா { மனிதனுக்கு கிடைத்த வரம் கற்பனை}
ReplyDeleteநன்றி தமிழன், அமீரகம் {இங்கு {இலங்கை} காணமல் போதல் என்றால் வேறு
அர்த்தம்}
ரொம்ப அழகா ரசிச்சுருக்கீங்க :) :) ரொம்ப நல்ல இருக்கு :) :) :)
ReplyDeleteநன்றி nivedhida devi
ReplyDeleteஅருமையான "பா" நண்பர் தங்கராசா ஜீவராஜ்.வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி வெங்கடேசன்
ReplyDeleteRomba Nalla irukku Anupavichchu eluthi irukkireenka Thodarnthu elutha ithayam niraintha vaalththukkal
ReplyDeleteNila
நன்றி நிலா
ReplyDeleteநன்றி sella
ReplyDeleteநல்ல கற்பனை.
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.
நல்ல கற்பனை.
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.
Nice
ReplyDeleteநன்றி ஆதித்தன்,பாலு மணிமாறன்
ReplyDelete
ReplyDeleteYou Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் கதை மட்டுமல்ல கவிதை சொல்வதும் எமக்கு பிடிக்கும். நீங்கள் தொடர்ந்து எழுதுவதும்பிடிக்கும். உங்களை வாழ்த்துவதும் எமக்கு பிடிக்கும்.
ReplyDeleteகவிதை பாவம் என்று விட்டுவிட்டேன்.
ReplyDeleteமனம் நிறைந்த நன்றிகள்.