Wednesday, December 03, 2008

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம், திருகோணமலை, இலங்கை.

Thampalakamam
தம்பலகாமம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமங்களில் ஒன்றாகும்.திருகோணமலையிலிருந்து 22 km தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.


Thampalakamam
வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேலென வயல் நிலங்கள் காட்சியளிப்பதும்,இக்கிராமத்தின் இயற்கை எழிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்றால் அதுமிகையாகாது.
Thampalakamam
குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கி.பி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடுஇயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள ஸ்வாமி மலையில் ஆதிகோணநாயகரையும் ,மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர்.

Thampalakamam
இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.
மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து ஸ்வாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.

வழமைபோலவே இம்முறையும் ஆதிகோணநாயகர் ஆலய மஹோற்சபம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இது சிறிய அறிமுகம் மட்டுமே ஆலயவரலாறும், பல சுவையான செய்திகளும் இனிவரும் காலத்தில் பதிவேற்றப்படும்.
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008, தொடர்பான புகைப்படத் தொகுப்பு தம்பை நகர் வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ளது.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

14 comments:

  1. திருத்தம்பலகாமம் என்பதை வழமைபோன்று தம்பலகாமம் என அழைப்பதே சரி. மற்றது எழுதிய விடயங்கள் பயனுள்ளவை.

    குளக்கோட்டன்

    ReplyDelete
  2. தங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. பதிவு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பயனுள்ள தகவல்களோடு சந்திப்போம்.

    ReplyDelete
  3. தம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களை அறிய ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  4. எழுதிய விடயங்கள் பயனுள்ளவை.

    ReplyDelete
  5. Dear Sir
    I Saw your Web and enjoy. Very Nice and your service is compulsury to your villege in this period. This is a good oppourtunity to others also.I wish you to all sucess. With best regards
    S.Kusalavan
    Trincomalee.

    ReplyDelete
  6. நன்றி ரவி,குசலவன்

    தம்பலகாமம் பற்றிய பல பயனுள்ள தகவல்கள் மருதநிழல் http://maruthanizal.blogspot.com எனும் வலைத்தளத்தில் காணக்கிடைக்கிறது.

    ReplyDelete
  7. Arumaiyaana thagaval. Jeevaraj-ku nanri

    Iniyavan on 31-08-2008 11:15

    ReplyDelete
  8. Jeevaraj,
    Very nice info.Looks interesting. From trikonamalai, how to reach this temple.Any map or guidance available.Please do continue to write more temples like this. Very glad to hear.
    We are always hearing war news, These info are very good to hear.

    Good job jeevaraj

    Kandaparake

    ReplyDelete
  9. நன்றி Kandaparake
    guidance to reach this temple available @ http://thampainakar.blogspot.com/

    ReplyDelete
  10. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே ...
    இந்த இடங்களை எல்லாம்
    நேரில் பார்க்க ஆசை
    எப்போது நிறைவேறும் என தெரியவில்லை ...

    அன்புடன்
    விஷ்ணு

    ReplyDelete
  11. சிறு வயதில் ஒரு முறை இக்கோயிலுக்கு வந்த ஞாபகம் உண்டு. இன்று உங்கள் பதிவினால் அதனை ஞாபகப்படுத்தவும், புதிய தகவல்களைப் பெறவும் முடிந்தது. நன்றி

    ReplyDelete
  12. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

    ReplyDelete
  13. ///நேரில் பார்க்க ஆசை //

    வாங்க விஷ்ணு நிலவரம் சரியாகும் போது...

    ReplyDelete