தூக்கமிழப்பதாய்ச் சொல்லி
துயர்கொள்ளவில்லை
பிறந்தநாள் வாழ்த்தெழுதி அதைப்
பிரித்துப் படிக்கச்சொல்லி-உன்னைநான்
நிர்ப்பந்திக்கவில்லை
பிரித்துப் படிக்கச்சொல்லி-உன்னைநான்
நிர்ப்பந்திக்கவில்லை
நீ போகும் பாதைபார்த்து
நீண்ண்டநேரம் காவல்காத்து உன்
வீடுவரை தொடரவில்லை
நீண்ண்டநேரம் காவல்காத்து உன்
வீடுவரை தொடரவில்லை
நீ கிழித்தெறிந்த காகித்ததை
நெஞ்சின்மேல் ஒட்டிக்கொண்டு
நித்திரை செய்யவில்லை
நெஞ்சின்மேல் ஒட்டிக்கொண்டு
நித்திரை செய்யவில்லை
நினைவுகளில்,கனவுகளில்
நீதானடியென்று
கவிதை சொன்னதில்லை
நீதானடியென்று
கவிதை சொன்னதில்லை
எழுதிமுடித்த பேனாக்கள்- உன்
எச்சில்பட்ட முடிந்துபோன
‘ஐஸ்’ கிறீம் குவளைகள்
உதறியதில் வீழ்ந்த
உன்னுடுப்புப் பொத்தான்களென்று
எதையும் நான் சேகரித்ததில்லை
எச்சில்பட்ட முடிந்துபோன
‘ஐஸ்’ கிறீம் குவளைகள்
உதறியதில் வீழ்ந்த
உன்னுடுப்புப் பொத்தான்களென்று
எதையும் நான் சேகரித்ததில்லை
நீ பார்க்க வேண்டுமென்று
யாருக்கும் பிச்சை போட்டதில்லை
யாருக்கும் பிச்சை போட்டதில்லை
நீ சிரிக்க வேண்டுமென்று
சில்லறை ஜோக் அடித்ததில்லை
சில்லறை ஜோக் அடித்ததில்லை
நீயாக வந்து பேசியபோதும்
நானாக எதையும் சொன்னதில்லை
நானாக எதையும் சொன்னதில்லை
உனக்குப் பிடிக்குமென்பதற்காய்
உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு
ஒத்துப்போனதாய்க் காட்டியதில்லை
உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு
ஒத்துப்போனதாய்க் காட்டியதில்லை
இப்போது கூட இதையெழுதியது
உனக்காக இல்லை.
உனக்காக இல்லை.
த.ஜீவராஜ்
அன்பு நண்பரே கவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteமுத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்யவும்.
நன்றி மஞ்சூர் ராசா
ReplyDeleteமுத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்துள்ளேன்.
அப்புறம் யாருக்காகவாம்... பொய் சொல்லப் போறோம் ...நாங்க பொய் சொல்லப் போறோம்
ReplyDelete..பொய் சொல்லப் போறோம் :) :) :) :) :) :) :)
அன்பின் ஜீவன்,
ReplyDeleteசின்னச் சின்ன வரிகளில், உங்கள் சிந்தனைக் கூட்டி அழகாய் வரைந்திருக்கும்
கவிதை அற்புதம் ! அற்புதம் !
இப்போது கூட இதையெழுதியது
ReplyDeleteஉனக்காக இல்லை.
இந்த கவிதையின் வடிவமே வித்தியாசமாக இருக்கிறது .வாழ்த்துகள்
எதிர்மறை வடிவங்கள் எடுபடுமா என யோசித்தேன் அவ்வளவுதான்.
ReplyDeleteநன்றி பூங்குழலி ,சக்தி ,சிவா... { நிறைய பொய் சொல்வீர்களோ }
என்ன சொல்ல வாறியள்...
ReplyDeleteஎதுவும் இல்லை என்றால் காதலை எப்படி சொல்வீர்கள்...
ReplyDeleteகாதலன் காதலிக்கு எழுதும் கவிதை போலல்லாமல் இது ஒரு வித்தியாசமான சிந்தனை கவிதை அருமையாக இருந்தது தொடருங்கள் வாழ்த்துகள்
ReplyDeleteராஜா கமல்.
நன்றி ராஜாகமல்
ReplyDeleteவருகைக்கும் பகிர்விற்கும்
king எதிர்மறை வடிவங்கள் எடுபடுமா என யோசித்தேன் அவ்வளவுதான்.
ReplyDeleteIt's really different from other normal 'kavithai" (it may due to my poor knowledge in Kavithai) but even then you have taken the same wording and situation to describe your views
ReplyDeleteBut it's really good.
I like to write in tamil but I don't know how to do that.
Shankar
நன்றி Shankar
ReplyDeleteஇந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்
http://www.suratha.com/unicode.htm
நல்லாருக்கு அண்ணா !
ReplyDeleteநன்றி மயாதி
ReplyDelete