Tuesday, December 30, 2008

சிறைவைக்கப்பட்ட வீடு


நேற்றுப்போல் இருக்கிறது
நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த  வீடு
பாதைவழியே தொடங்கிய –எம்
நெடுந்தூரப் பயணம்.


உயிர்பிரிதல் பற்றிய உறுத்தலில்
ஊர்பற்றிய உணர்வலைகள்
ஒருவரிடமும் இல்லை அப்போது
இப்போதுதான்,
எஞ்சியவர்களில் மிஞ்சியவர் இதயங்களில்
ஊர்,உடைந்துபோன வீடு,
இழந்து போன உறவுகள்,
அவர்தம் நினைவுகள்
என்றெல்லாம் ஏக்கமாய்.

ஒன்றிரண்டாய் குடிவந்து
ஊருக்கும் உயிர் வந்து
ஒருவருடமாகிறது
நாங்கள் மட்டும்
நடைப்பிணமாய்
நண்பர்கள் வீட்டில்

நாள்தோறும் எதிர்பார்ப்பு
நனைந்து போகிறது கண்ணீரில்
பேச்சுக்கள், பேச்சுக்கான பேச்சுக்கள்,
அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,வாக்குறுதிகள்
சமாதானத்துக்கான யுத்தம்
என்றனைத்துக்கும் அப்பால்
சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு
எப்போது உடையும்
உயர் பாதுகாப்பு வலயம்.

 கவிதைத.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

17 comments:

  1. வாழிடமும் இருப்பும் மறுக்கப்பட்ட உயிர்களின் வேதனைகளிலிருந்து கசியும் வார்த்தைகள் கவிதையாகியிருக்கிறது.
    கவிதை அருமை.

    உங்களைப் பற்றிய அறிமுகத்தை மற்றும் பதிவுகளின் பட்டியலைப் பெரிய எழுத்துருவில் இடுங்கள் நண்பரே.

    பின்னூட்டப்பெட்டியில் உள்ள வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !

    ReplyDelete
  2. வணக்கம் ஜீவராஜ்,

    தற்போது தம்பலகாமத்திலா இருக்கிறீர்கள்?

    வலைபப்திவு நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. 90 இன் பிற்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளைத் தொடர்ந்து திருமலையில் வாசம்,மயூரன் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரே பாடசாலை,4வருடம் மூத்தவன் நான்.

    ReplyDelete
  4. நன்றி ரிஷான், உங்கள் வாழ்த்துக்கு, உங்கள் ஆலோசனைக்கு அமைய வலைப்பதிவை மாற்றியுள்ளேன்.

    ReplyDelete
  5. வலிமிகுந்த உணர்ச்சிக்கவிதை ஜீவன்..


    வெள்ளைப்பூக்கள் உலகம் முழுதும் மலர பிரார்த்தனைகளுடன்...

    ReplyDelete
  6. நல்ல கவிதை நண்பரே ... உணர்ச்சிகளின் கொந்தளிப்பாய்..
    வேதனைகள் விலகிடும் ..
    விடுதலையும் விரைந்துவரும் ...

    ReplyDelete
  7. ஜீவன் மிகவும் அழுத்தமான கவிதை.. காலம் மாறும்.. கவலைகள் ஒழியும்

    ReplyDelete
  8. விவரிக்க முடியாத பல உணர்வுகளை உள்ளடக்கியது உங்கள் கவிதை ....


    விடியல் விரைவில் வர என் பிராத்தனைகள் .

    ReplyDelete
  9. கவலைப் படாதே சகோதரா

    ReplyDelete
  10. அழுத்தமான கவிதை
    அன்புடன்
    சிவா...
    நன்றி சிவா

    விடியல் விரைவில் வர என் பிராத்தனைகள் .
    பூங்குழலி
    நன்றி பிராத்தனைக்கு......


    கவலைப் படாதே சகோதரா
    தமிழன்
    நன்றி தமிழன் { நாங்கள் மட்டும் நடைப்பிணமாய் நண்பர்கள் வீட்டில் }


    அன்புடன்
    ஜீவன்

    ReplyDelete
  11. நன்றி கோகுலன் பிரார்த்தனைக்கு.
    வேதனைகள் விலகிடும் .. சொன்ன தோழன் விஷ்ணுவுக்கும் நன்றி

    ReplyDelete
  12. மிகவும் அழுத்தமான கவிதை

    ReplyDelete
  13. நாள்தோறும் எதிர்பார்ப்பு
    நனைந்து போகிறது கண்ணீரில்
    பேச்சுக்கள், பேச்சுக்கான பேச்சுக்கள்,
    அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,வாக்குறுதிகள்
    சமாதானத்துக்கான யுத்தம்
    என்றனைத்துக்கும் அப்பால்
    சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு
    எப்போது உடையும்/////

    உண்மைகளின் ஊர்வலம்!!!
    ஊமையானது மனம்!!!!

    ReplyDelete
  14. நன்றி thevanmayam அவர்களே

    ReplyDelete
  15. நாள்தோறும் எதிர்பார்ப்பு
    நனைந்து போகிறது கண்ணீரில்
    பேச்சுக்கள், பேச்சுக்கான பேச்சுக்கள்,
    அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,வாக்குறுதிகள்
    சமாதானத்துக்கான யுத்தம்
    என்றனைத்துக்கும் அப்பால்
    சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு
    எப்போது உடையும்
    உயர் பாதுகாப்பு வலயம். //
    மனதின் ஏக்கங்களும் எண்ணங்களும் ரணங்களும் கவிதையின் எதிர்பார்ப்பாக.... தொடருங்கோ.... நியாயமான கேள்விகள்.... இதற்கான பதில்கள் மட்டும் சர்வ கட்சி ஆலோசனைக் குழுவின் ஆராய்ச்சியில்....

    ReplyDelete