Wednesday, August 20, 2008

இடப்பெயர்வு



அவசரத்தில் அவிழ்க்காமல்
விட்டு வந்த மாடு

பூட்டிய கூட்டுக்குள்
கோழியும் , குஞ்சும்

Wednesday, August 13, 2008

தம்பலகாமம்.க.வேலாயுதம்,திருகோணமலை,இலங்கை.

 Thampalakamam
91ம் அகவையில் தம்பலகாமம்.க.வேலாயுதம்
தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.

வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.

1917 இல் தம்பலகாமத்தில் பிறந்த இவர் சிறுவயதுமுதலே இசை, நாடகம்,கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்பபுக்கு மேல் தொடரமுடியாது போனது.

இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்த தென்றால் அது மிகையாகாது.

அவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.

91ம் அகவையிலும் தமிழ்ப்பணி செய்து வாழும் செம்மலே நீ ஆதிகோணநாயகர் அருள்கொண்டு நீடுவாழி.

முத்தும் சென்னெல்லும் தேனும் விளைகின்ற
தத்தி நீர்வழியும் தம்பலகாமத்தில்
கத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்
தித்திக்கும் சுவையூட்டும் 'செந்தமிழே' நீ வாழ்க.

அவரது நூலுருவாக்கம் பெற்ற படைப்புகள்.
‘ரங்கநாயகியின் காதலன்’
{குறுநாவல்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,
திருகோணமலை.

இந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையேயான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித்திறனும் எவ்வாறு ஈழத்தில் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறது.

‘தம்பலகாமம்’ நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது ‘தமிழர் பட்டணம்’ என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சு ஒரு கணம் நிமிர்கின்றன.

வல்வை.ந.அனந்தராஜ்

தம்பலகாமம்.க.வேலாயுதம்{வாழ்வியல் ஆவணம்}
வெளியீடு –ஈழத்து இலக்கியச்சோலை,
திருகோணமலை.


எந்த அளவிற்கு அவர் மூலம் அவர் பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய தகவல்களை அறியமுடியுமோ,அந்த அளவிற்கு அறிந்து இங்கு பதியவைத்துள்ளோம். ‘வாழும்போதே வாழ்த்துவோம்’
கலாவினோதன், கலைவிருதன்,
கலாபூஷணம்
த.சித்தி அமரசிங்கம்.


தமிழ் கேட்க ஆசை
{கட்டுரைத் தொகுப்பு}
வெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம்,
தம்பலகாமம்.

தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 30 கட்டுரைகள் ‘தமிழ் கேட்க ஆசை’ என்று நூலுரு பெற்று வெளிவந்திருப்பதையும்,நூலாசிரியர் கெளரவிக்கப்படுவதையும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

க.துரைரெட்ணசிங்கம்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
திருகோணமலை.

த.ஜீவராஜ்

மனம் துடிக்கும்.....



நிலவு பிடிக்கும்
நிலவெறிக்கும் நாளில் வரும் –உன்
நினைவு பிடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும்
கொலுசு பிடிக்கும்
கொலுசுகளைக் கூட்டிவரும்
பாதங்கள் நடந்துபோன
பாதைபிடிக்கும்- நீ
கடந்துபோன பின்னும் என்
சிந்தைவிட்டகலா உன்
சிரித்த முகம் பிடிக்கும்